என்ன ஆச்சு இந்த தமிழ் ஹீரோவுக்கு? திடீரென ஆபாச வீடியோக்களை வெளியிட்டதால் பரபரப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரை உலகில் சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்தவர், திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'வழக்கு எண் 18/’, ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ’வில் அம்பு’, ’மாநகரம்’ உள்ளிட்ட படங்களில் நடிகர் ஸ்ரீ நடித்துள்ளார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், சில நாட்களில் மனநிலை காரணமாக வெளியேறினார். அதன் பிறகு இவருக்கு எந்த சினிமா வாய்ப்பும் கிடைக்கவில்லை.
தற்போது திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், அவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம் என்றும், அல்லது மனரீதியான ஏதாவது பிரச்சனைகள் இருக்கலாம் என்றும், நல்ல மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுரை கூறி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள வீடியோவில், சிலம்பாட்டம் படத்தில் இடம்பெற்ற "Where is the Party?" உள்ளிட்ட பாடல்களை பாடும் வீடியோக்களையும் பதிவு செய்துள்ளார். மேலும் மேல் சட்டை இல்லாமல் இருக்கும் செல்ஃபி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவு செய்து, சில சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் கேப்ஷனாக எழுதி வருகிறார்.
"எப்படி இருந்த நடிகர் இப்படி ஆகிவிட்டார்?" என ரசிகர்கள் அவருக்கு அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments