'குக் வித் கோமாளி' செட்டுக்கு வரும் பிரபல நடிகர்: போட்டியாளர்கள் உற்சாகம்


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
’குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் தற்போது 3வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ராகுல் தாத்தா, மனோபாலா, அந்தோணி தாசன், சந்தோஷ் பிரதாப், வித்யூலேகா ராமன், ரோஷினி, ஸ்ருதிகா, கிரேஸ், அம்மு அபிராமி, தர்ஷன் ஆகியோர் போட்டியாளர்களாக இருந்த நிலையில் இதுவரை நான்கு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் முத்துகுமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்துள்ளது நிகழ்ச்சியின் விறுவிறுப்பை அதிகமாக்கியுள்ளது.
இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இந்த வாரம் சிவகார்த்திகேயன் தனது ‘டான்’ படத்தின் குழுவினர்களோடு வரவிருப்பதாகவும், ’டான்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாகவும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ’டான்’ படத்தில் நடித்த ஷிவாங்கி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் இருப்பதால் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் வெளியேவரும் என எதிர்பார்க்கப்படுகிராது.
ஏற்கனவே ’குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் சிவகார்த்திகேயன் வருகை தந்தார் என்பதும், அனைத்து போட்டியாளர்கள் குறித்து அவர் தனது கருத்தை தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வாரம் சிவகார்த்திகேயன் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரவிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments