தமிழ் படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ.125 கொடுத்து வாங்கியதா அமேசான்?

தமிழில் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் ஒன்றின் டிஜிட்டல் உரிமையை மட்டும் 125 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கி இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’புஷ்பா’, ’ஆர்.ஆர்.ஆர்’. ’கேஜிஎப் 2’ ஆகிய பிரம்மாண்டமான படங்களை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் உள்பட பல மொழிகளில் பான் - இந்திய திரைப்படமாக ரிலீசாகவிருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ பாகம் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு பாகங்களின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமைகளை அமேசான் ப்ரைம் நிறுவனம் 125 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. தமிழ் திரைப்படம் ஒன்று 125 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் உரிமை மட்டுமே விற்பனை ஆகி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. மேலும் இந்த படத்தின் 2 பாகங்களின் மொத்த பட்ஜெட் ரூபாய் 500 கோடி என்று கூறப்படும் நிலையில் அவற்றில் 25% டிஜிட்டல் உரிமையிலிருந்து மட்டுமே தயாரிப்பாளருக்கு கிடைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'அவதார் 2' ரிலீஸ் தேதி தெரியும்: 'அவதார் 3, 4, 5 ரிலீஸ் தேதி தெரியுமா?

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

'காத்துவாக்குல ரெண்டு காதல்' டிஜிட்டல்-சாட்டிலைட் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விக்னேஷ் சிவனின் திரைக்கதை அனிருத்தின் இசை ஆகியவை

பிரபல நடிகருடன் காஷ்மீரில் பிறந்த நாள் கொண்டாடிய சமந்தா!

நடிகை சமந்தாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பதும் அது மட்டுமின்றி அவர் நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம்

இந்தி தான் தேசிய மொழி என்று கூறிய நடிகரை வெளுத்து வாங்கிய தனுஷ், சிம்பு பட நாயகி!

 பிரபல நடிகர் கிச்சா சுதீப்பை  பாராட்டும் வகையில் நேற்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் ஒரு டுவிட்டை ஹிந்தியில் பதிவு செய்ததற்கு, 'தனக்கு இந்தி புரியவில்லை என்றும் அனைவருக்கும் புரியும்

சர்வதேச திரைப்பட விழா- குழுவிற்கு நடுவராகியிருக்கும் பிரபல நடிகை… ரசிகர்கள் வாழ்த்து!

சர்வதேச அளவில் முக்கிய திரைப்பட விழாவாகக் கருதப்படும் கேன்ஸ் திரைப்பட விழா குழுவிற்கு பாலிவுட் நட்சத்திரம் தீபிகா