நம்பிக்கை வாகெடுப்பு குறித்த ஸ்டாலின் வழக்கு. நாளை விசாரணை

  • IndiaGlitz, [Tuesday,February 21 2017]

கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது. இந்த வாக்கெடுப்பில் அமளி ஏற்பட்டதால் திமுக உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பின்னர் வாக்கெடுப்பு நடந்தது.

இந்நிலையில் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நடைபெற்ற நம்பிக்கை வா‌‌‌க்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ஹுலுவாடி ரமேஷ் மற்றும் ஆர். மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மு.க.ஸ்டாலின் தரப்பில்‌ திமுக மூத்த வழ‌க்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி

எதிர்கட்சியினர் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பினை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

More News

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தென்னிந்திய திரையுலகையே சமீபத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் என்றால் அது பிரபல நடிகை பாவனாவை மர்ம நபர்கள் கடத்தி அத்துமீறிய சம்பவம்தான். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்க கோரியும் மலையாள திரையுலகம் மட்டுமின்றி தமிழ் திரையுலகமும் கேரள அரசுக்கு கோரிக்கை விட

பாவனா கடத்தலுக்கு பிரபல நடிகர் காரணமா?

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தின் விசாரணை தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஏற்கனவே இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் என்று கூறப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது...

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால். சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

நடிகர் சங்க செயலாளராக இருக்கும் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட கடந்த சில நாட்களுக்கு முன்னர் விண்ணப்பம் செய்தார். இந்த விண்ணப்பத்தை உலக நாயகன் கமல்ஹாசன் முன்மொழிந்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

தேசிய அளவிலான பளூதூக்கும் போட்டியில் தமிழ் நடிகை

விளையாட்டு துறையில் சாதனை படைத்த சடகோபன் ரமேஷ், ரித்திகாசிங் போன்ற பலர் சினிமா துறையில் நுழைந்தது போல், சினிமாத்துறையில் உள்ள ஒரு நடிகை விளையாட்டு துறைக்கு சென்றுள்ளார்...

மீண்டும் இணைந்த சிம்பு-அனிருத்

பல்திறமை கொண்ட நடிகர்களில் ஒருவராகிய சிம்பு, சமீபத்தில் சந்தானம் நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...