தமிழக பாஜக பொதுச்செயலாளருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!!!

  • IndiaGlitz, [Tuesday,September 29 2020]

 

தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவனுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதைப்போலவே நேற்று இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 94 வயதான அவர் நேற்று முன்தினம் மூச்சுத்திணறல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதிச்செய்யப் பட்டதாகவும் அதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் கட்சி தலைவர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், பிரமுகர்கள் எனப் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் பாஜகவின் தமிழகப் பொதுச் செயலாளருக்கும் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்குக் கொரோனா உறுதியாகி இருக்கிறது. தற்போது அவர்களுக்கு தீவிரச் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

More News

மசாஜ் செய்ய வந்த விஞ்ஞானி கடத்தல்: பிக்பாஸ் பெண் போட்டியாளர் கைது!

மசாஜ் செய்ய வந்த விஞ்ஞானியை கடத்தி வைத்துக் கொண்டு அவருடைய மனைவியிடம் பணம் கேட்டு மிரட்டிய பிக்பாஸ் பெண் போட்டியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

யூடியூபில் ஆபாச விமர்சனம்: அடித்து உதைத்த பெண்களால் பரபரப்பு

பெண்களை ஆபாசமாக விமர்சனம் செய்து யூடியூபில் வீடியோ பதிவு செய்த ஒருவரை மூன்று பெண்கள் இணைந்து அடித்து உதைத்த வீடியோ காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 

மதுரை ஐகோர்ட்டில் திடீரென மனுதாக்கல் செய்த நாகர்கோயில் காசி: பரபரப்பு தகவல்!

தன் மீதான வழக்கில் தனக்கு ஆதரவாக வாதாட வக்கீல்கள் யாரும் இல்லாததால் தனக்கு சட்ட உதவி கிடைக்கவில்லை என்றும் எனவே தன் மீதான வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்

புதியவகை நோய்த்தொற்றுக்கு 4 ஆம் கட்ட அவசர நிலையைப் பிறப்பித்துள்ள சீனா!!! பரபரப்பு தகவல்!!!

கடந்த ஜுன் மாத இறுதியில் சீனாவில் ஒரு புதிய வகை மர்மநோய் பரவி வருவதாகப் பரபரப்பு தகவல் வெளியானது.

சிவகார்த்திகேயன் பட நடிகர் தூக்கில் தொங்கி தற்கொலை: பரபரப்பு தகவல்

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான 'மெரினா' என்ற படத்தில் நடித்த நடிகர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது