அண்ணாமலை பயோபிக் படம் தயாராகிறதா? 2026ல் அரசியலுக்கு வரும் நடிகர் தான் நடிக்கிறாரா?

  • IndiaGlitz, [Thursday,May 02 2024]

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாகவும் இதில் அண்ணாமலை கேரக்டரில் 2026 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன நடிகர் தான் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வருவது சர்வ சாதாரண நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது என்பதும் சமீபத்தில் கூட ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின் படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேரக்டரில் 2026 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் என்று சமீபத்தில் பேட்டி அளித்த விஷால் நடிக்க இருப்பதாகவும் விரைவில் இந்த தகவல் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, ஐபிஎஸ் அதிகாரி ஆகி, கர்நாடக மாநிலத்தை கலக்கிய அண்ணாமலை அதன்பிறகு பதவியை ராஜினாமா செய்துவிட்டு செய்துவிட்டு தமிழக அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில் அவருடைய வாழ்க்கை வரலாறு படம் எடுத்தால் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

குரு பெயர்ச்சி 2024: யாருக்கு யோகம்? யாருக்கு வெற்றி ? | Subash Balakrishnan |ஆன்மீகக்ளிட்ஸ்

பிரபல ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன் அவர்கள், ஆன்மீக க்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், 2024ம் ஆண்டு குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன

28 வயது இளம் இசையமைப்பாளர் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

28 வயதான இளம் இசையமைப்பாளர் உடல் குறைவால் காலமான நிலையில் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன நடிகர் சங்க தலைவர் நாசர்.. என்ன காரணம்?

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிவிப்பு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தீபாவளி ரேஸில் இடம் பிடித்த கவின் படம்.. நெல்சனுடன் இணையும் படத்தின் முக்கிய தகவல்..!

நடிகர் கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின்

கபிலன் வைரமுத்து எழுதிய ஆங்கில நாவல்... குற்றப்பரம்பரை அரசியலை மையமாகக் கொண்டது..!

குற்றப்பரம்பரை அரசியலை மையமாகக் கொண்ட கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் நாவல்  ஆங்கிலத்தில் வெளியானது. மேலும் இரண்டு நிமிட சிறப்பு காணொளியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.