இந்த தமிழ் படத்தின் ஆடியோ விழாவில் முதல்வர் கலந்து கொள்கிறாரா?

பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு தயாராகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் 8ஆம் தேதி தெலுங்கு ஆடியோ மற்றும் டிரைலர் விழா நடைபெறும் என்றும் இதில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

பான் - இந்தியத் திரைப்படமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
 

More News

திரையரங்கில் சூப்பர்ஹிட்டான 'யானை' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான 'யானை' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ஜீ5 ஓட்டி தளத்தில் வெளியாகி

'சீதாராமம்' நடிகையின் டாப்லெஸ் புகைப்படங்கள்: திடீரென வைரலானதால் பரபரப்பு!

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர் நடிப்பில் உருவான 'சீதாராமம்' என்ற திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்தப் படம் 30 கோடி ரூபாய்

பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகளா? மனைவியுடன் கங்கைக்கரையில் புகைப்படம்!

பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகளா?

கையில் குழந்தை, கணவருக்கு முத்தம்: காஜல் அகர்வால் வீட்டில் என்ன விசேஷம்?

ஒரு கையில் குழந்தை இன்னொரு பக்கம் கணவருக்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை காஜல் அகர்வால் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

கர்ப்பிணி போட்டோஷூட்டில் இவ்வளவு கிளாமரா? விஜய் பட நடிகை மீது ரசிகர்கள் அதிருப்தி!

விஜய் படத்தில் நடித்த நடிகையும் பிரபல பாலிவுட் நடிகையுமான பிபாஷா பாசு கர்ப்பிணி நேரத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அளவுக்கு அதிகமான கிளாமர்