ஈசிஆர் ரிசார்ட் செல்கிறாரா டிஜிபி?

  • IndiaGlitz, [Friday,February 10 2017]

தனக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் 130 பேர் ஆதரவுஇ கொடுத்திருப்பதாக நேற்று சசிகலா கவர்னரிடம் கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் அந்த 130 எம்.எல்.ஏக்கள் ஈசிஆர் சாலையில் உள்ள ரிசார்ட்டில் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

சமூக ஊடகங்கள் மற்றும் புலனாய்வு பத்திரிகைகளின் தகவலின்படி எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ரிசார்ட்டில் ஜாமர் வைத்து செல்போன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், இண்டர்நெட், டிவி, உள்பட அனைத்து தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ரிசார்ட்டில் பணிபுரியும் ஊழியர்கள் உள்பட யாரையும் வெளியே அனுமதிக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை தமிழக பொறுப்பு ஆளுனர் டிஜிபியிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் இருக்கும் இடம் குறித்து கேள்வி எழுப்பியதாகவும், தேவைப்பட்டால் டிஜிபியே நேரடியாக ஈசிஆர் ரிசார்ட் சென்று எம்.எல்.ஏக்களின் இருப்பிடத்தை அறிந்து வர ஆலோசனை கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே டிஜிபி அதிரடியாக ஈசிஆர் ரிசார்ட் சென்றால் எம்.எல்.ஏக்கள் அங்கு இருக்கின்றார்களா? இருந்தால் அவர்களின் மனநிலை என்ன என்பது குறித்த உண்மை வெளிவருமா? என்பதை அறிய தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

More News

600-ல் ஹாட்ரிக். வரலாறு படைத்தது இந்திய கிரிக்கெட் அணி.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சற்று முன் வரை 163 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 660 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் விராத்கோஹ்லி 204 ரன்களும், முரளிவிஜய் 108 ரன்களும் எடுத்துள்ளனர்.

அமைச்சர் செல்லூர் ராஜூவை சிறை வைத்துள்ளரா சசிகலா? போலீசில் அதிர்ச்சி புகார்

அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் ஈசிஆரில் உள்ள சொகுசு ரிசார்ட் ஒன்றில் சிறை வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறைபிடித்து வைத்துள்ளதாக சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவினர்களும், தமிழக மக்களும் அதி

அதிமுகவில் இருந்து என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. மதுசூதனன்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேற்று முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த நிலையில் இன்று அவரை அவைத்தலைவர் பதவியில் இருந்து சசிகலா நீக்கியுள்ளார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நீக்கம். புதிய அவைத்தலைவர் யார்?

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேற்று முதல்வர் ஓபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்

வித்தியாசமான போஸ் கொடுத்த பிரபல நடிகை கைது.

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'எக் யோதா' என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி அல்பாட்