close
Choose your channels

ரூ.6000 வெள்ள நிவாரண நிதி யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசின் அரசாணை..!

Wednesday, December 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்து இருந்தார். இது குறித்த அரசாணை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அரசாணையில் சென்னையில் உள்ள அனைவருக்கும் 6000 ரூபாய் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அரசாணையில் உள்ள முக்கிய விவரங்கள் இதோ:

கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌/ வருவாய்‌ நிருவாக ஆணையர்‌ மற்றும்‌ மாநில நிவாரண ஆணையர்‌ அவர்கள்‌ வாழ்வாதாரம்‌ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, வெள்ள நிவாரணத்‌ தொகையை சம்பந்தப்பட்ட நியாயவிலைக்‌ கடைகள்‌ மூலமாக ரொக்கமாக வழங்கப்படலாம்‌ என்றும்‌, இதனை முறையாக கூட்ட நெரிசலை தவிர்க்கும்‌ வகைமில்‌ டோக்கன்களை முன்னதாகவே கூட்டுறவுத்‌ துறை மூலம்‌ வழங்கப்படலாம்‌ என்றும்‌ வருமான வரி செலுத்துபவர்கள்‌ மற்றும்‌ ஒன்றிய மற்றும்‌ மாநில அரசு/ பொதுத்துறை நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ உயர்‌ அலுவலர்களைப்‌ பொருத்த வரையில்‌, அவர்கள்‌. தங்களின்‌ பாதிப்பு விபரங்களையும்‌, வங்கி கணக்கு எண்‌ ஆகியவற்றை தெரிவித்து
நிவாரணத்தொகையினை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படலாம்‌ எனவும்‌, விரிவான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளார்‌.

மிக்ஜாம் புயலால்‌ பாதி்ப்புக்குள்ளான கீழ்க்கண்ட 4 மாவட்டங்களில்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின்‌ பரிந்துரையின்படி இந்த நிவாரணம்‌ பின்வருமாறு வழங்கப்படலாம்‌ என்றும்‌ தெரிவித்துள்ளார்‌

(அ) சென்னை மாவட்டம்‌: அனைத்து வட்டங்கள்‌;

(ஆ) செங்கல்பட்டு மாவட்டம்‌: தாம்பரம்‌, பல்லாவரம்‌, வண்டலூர்‌ வட்டங்கள்‌, முழுமையாகவும்‌, மற்றும்‌ திருப்போரூர்‌ வட்டத்தில்‌ மூன்று வருவாய்‌ கிராமங்கள்‌

காஞ்சியும்‌ மாவட்டம்‌: குன்றத்தூர்‌ வட்டம்‌ முழுமையாகவும்‌,

ஸ்ரீபெரும்பதூர்‌ வட்டத்தில்‌ மூன்று வருவாய்‌ கிராமங்கள்‌

திருவள்ளூம்‌ மாவட்டம்‌: (1) பொன்னேரி (2) கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர்‌ ஆகிய ஆறு வட்டங்கள்‌

இந்த புயல்‌ மற்றும்‌ அதிகனமழை காரணமாக சில பகுதிகளில்‌ ஏடிஎம்‌ இயங்காததாலும்‌, பயனாளர்களின்‌ வங்கிக்‌ கணக்கு எண்களை சேகரித்து நிவாரணம்‌ வழங்க. காலதாமதம்‌ ஆகும்‌ என்பதாலும் பாதிக்கப்பட்ட பலர்‌ தங்களது. ரேசன் அட்டை, வங்கிக்‌ கணக்கு விவரங்கள்‌ ஆகியவற்றை இழந்திருக்கக்கூடும்‌ என்பதாலும்‌, அவர்களுக்கு உடனடியாக பயனளிக்கும்‌ வகையில்‌ நிவாரணத்தொகை ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்‌, கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ / வருவாய்‌ நிர்வாக ஆணையர்‌ மற்றும்‌ மாநில நிவாரண ஆணையர்‌ அவர்களின்‌ கருத்துக்களை கவனமுடன்‌ பரிசீலித்து அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது.

மிக்ஜாம்‌ புயலால்‌ வாழ்வாதாரம்‌ பாதிக்கப்பட்ட/ இரண்டு நாட்களுக்கு மேல்‌ மழை வெள்ளம்‌ சூழ்ந்து துணிமணிகள்‌! பாத்திரங்கள்‌, வீட்டு உபயோகப்‌ பொருட்கள்‌ இழந்த குடும்பங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள வட்டங்கள்‌// வருவாய்‌ கிராமங்கள்‌) நியாயவிலைக்‌ கடைகள்‌ மூலமாக டோக்கன்‌ வழங்கும்‌ முறையை பின்பற்றி ரூ.6000/- வழங்கப்படும்‌.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.