கொரோனா சிகிச்சையில் சிறந்து விளங்கும் தமிழக மருத்துவமனைகள்… விருது பெற்று சாதனை!!!

  • IndiaGlitz, [Saturday,September 19 2020]

இந்திய அளவில் அதிக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலமாகத் தமிழகம் முன்னிலைப் பெற்று விளங்குகிறது என ஐசிஎம்ஆர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியிட்டு இருந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் குணமாகி வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து காணப்படுவதாகத் தமிழகச் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தவிர கொரோனா பரவலைத் தடுக்கவும், தனிமையில் இருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கவும், உடனடியாகச் சிகிச்சை தேவைப்படு பவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கவும் தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகத் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்து இருப்பதாகத் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்து உள்ளார். இந்திய அளவில் சிறந்த முறையில் கொரோனாவிற்கு சிகிச்சை வழங்கும் மருந்துவ மனைகளை தேர்வு செய்த விருது வழங்க இந்திய சுகாதாரத்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பு (CAHO) முடிவு செய்தது.

அதற்கான தேர்வில் இந்தியா முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான மருத்துமனைகள் கலந்து கொண்டன. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இத்தேர்வில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இந்தியாவிலேயே முதலிடம் பெற்று விருதை பெற்றிருக்கிறது. இத்தகவலை சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார்.

சென்னையிலுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதலில் தமிழ்நாடு சட்டமன்ற செயலகக் கட்டிடமாக இருந்து பின்னர் அதிமுக ஆட்சியில் மருத்துவமனையாக மாற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மருத்துவமனையில் 18 ஆயிரம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த மருத்துவனையைத் தவிர வேலூரில் செயல்பட்டு வரும் சிஎம்சி மருத்துவமனையும் சிறந்த முறையில் கொரோனா சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

இதனால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மற்றும் வேலூரில் இயங்கிவரும் தனியார் கிறிஸ்துவ மிஷினரி மருத்துவமனை (சிஎம்சி) ஆகிய இரு மருத்தவ மனைகளுக்கும் தற்போது இந்திய சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பு (CAHO) விருதுகளை வழங்கி கவுரவித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொள்ளையடித்த தங்கச் செயினை டிவி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்த பாசக்கார திருடன்!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

கன்னட மொழியில் ஒளிபரப்படும் ஒரு தனியார் டிவி நிறுவனத்திற்கு பார&

வெறுமனே 90 நிமிடத்தில் துல்லியமான கொரோனா ரிசல்ட்… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!!!

இதுவரை கொரோனா பரிசோதனைக்கு RTPCR சோதனை கருவியை மட்டுமே உலக நாடுகள் நம்பியிருக்கின்றன

முந்தானை முடிச்சு' ரீமேக்: ஊர்வசி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்த 'முந்தானை முடிச்சு' திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் 37 ஆண்டுகள் கழித்து

வாடிவாசல் நாயகனே, வாருங்கள் அரசியலுக்கு: சூர்யா ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்!

'வாடிவாசல் நாயகனே வாருங்கள் அரசியலுக்கு' என சூர்யாவின் ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

இந்திய நீதித்துறை குறித்து மீண்டும் டுவிட் போட்ட சூர்யா!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவது