சாதி வாரியான புள்ளி விவரக் கணக்கீடு… அவசியம் குறித்து தமிழக அரசு புதிய விளக்கம்!!!

 

தமிழகத்தில் சாதி வாரியான புள்ளி விவரக் கணக்கெடுப்புகளை நடத்தி அதன் அறிக்கைகளை சமர்ப்பிதற்கு புதிய ஆணையம் ஒன்று அமைக்கப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் புதிய ஆணையம் ஏன் ஏற்படுத்த வேண்டும்? மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும்போது அவர்களிடம் இருந்தே சாதி வாரியான புள்ளி விவரக்கணக்கெடுப்புகளை கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பியான ரவிக்குமார் விமர்சித்து இருந்தார். அந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மீண்டும் தமிழக அரசு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அதில் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் கண்காணிப்பு என்பது எடுக்கப்பட்டு பொருளாதாரம், இடம், மதம் போன்ற விவரங்கள் (சாதிவாரி தகவல் தவிர்த்து) வெளியிடப்படும். காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டது. 2011 ஆம் ஆண்டு முதல் இந்த 9 ஆண்டுகளில் சாதி வாரியாக பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

இதனால் மத்திய அரசிடம் இருந்து புள்ளிவிவரங்களை பெற்றால் என்ன பயன் விளைவும் என்பதையும் எம்.பி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் தமிழக வாரியாக நாம் புதிய புள்ளிவிவரங்களை எடுத்தால் பட்டியல் இனத்தவரின் ஜனத்தொகை இந்த 9 ஆண்டுகளில் பெருகி இருக்கும். அந்த விகிதத்தின் அடிப்படையிலேயே அவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும். அது அவர்களுக்குத்தான் பயன் என்பதையும் அறிய வேண்டும்.

மேலும் 10 ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள் வந்து இருக்கும். அதனால் முதல்வர் இந்த ஆணையத்தை அமைத்ததில் தவறு ஏதும் இல்லை. மேலும் மத்திய அரசின் அடுத்த புள்ளி விவரங்கள் கணக்கீடு வரும் 2023 ஆம் ஆண்டு தான் வெளியிடப்படும். இந்த ஆணையம் அமைத்ததன் மூலம் தமிழகம் சார்ந்த புள்ளி விவரங்கள் விரைவாக எடுக்கப்பட்டு சலுகைகளும் மக்களுக்கு சரியாக கொண்டு போய் சேர்க்கப்படும் என்பதை அனைவரும் உணர வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.