கொரோனாவிற்கு அவசர உதவியைப் பெறுவது எப்படி?

  • IndiaGlitz, [Wednesday,May 19 2021]

தமிழகம் முழுவதும் நடைபெறும் கோவிட்-19 நோய்த்தொற்று தொடர்பான அழைப்புகள், விசாரணைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பொருட்டு கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள பொதுசுகாதாரத் துறை வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மையம் ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்தக் கட்டளை மையம் தற்போது கோவிட் WAR ROOM என அழைக்கப் படுகிறது. தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தும் இந்த மையத்தை 104 என்ற எண்ணின் மூலம் எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும். மேலும் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், ஆக்சிஜன் விநியோகம், ரெம்டெசிவிர் மருந்து பற்றிய விவரங்கள், கொரோனா அறிகுறிகளுக்கான ஆலோசனைகள் என அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை 33,059 ஆக பதிவாகி உள்ளது. இதுபோன்ற சமயத்தில் தமிழகத்தின் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற கடும் நெருக்கடிகள் நிலவி வருகிறது. இதனால் 104 என்ற அவசர எண்ணைத் தொடர்பு கொண்டு படுக்கை வசதியை ஏற்பாடு செய்து கொடுக்கும்படி அழைப்பு விடுக்கலாம். மேலும் ஒரு மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை வசதி பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.

இதுபோன்ற சேவைக்கு ஏற்கனவே இணையதள வசதி தொடங்கப் பட்டு உள்ளது என்றாலும் கோவிட் வார் ரூம்மிற்கு அழைப்பு விடுத்தால் தேவையறிந்து உடனடியாக உதவி செய்ய 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து 24 மணிநேரமும் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் அறிகுறியோடு இருக்கும் நபர்கள் இந்த வார் ரூமை தொடர்பு கொள்ளும்போது மருத்துவர்களின் ஆலோசனையை உடனடியாகப் பெற்றுக் கொள்ள முடியும். தேவைப்பட்டால் அவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஏற்பாடு செய்து கொடுக்கவும் கோவிட் வார் ரூம் முன்வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் அனைத்துத் தனியார் மருத்துவமனைகளுடன் இந்த கோவிட் வார் ரூமுடன் நேரடி தொடர்பு கொண்டு இருக்கும்.

இதனால் ஒவ்வொரு மருத்துவமனைகளின் முன்னாலும் எத்தனை ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிற்கின்றன. அவர்களின் தேவை என்ன என்பது உள்பட அனைத்து விவரத்தையும் இந்த வார் ரூம் தெரிந்து வைத்திருப்பதோடு அவசர தேவை அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும் முன்வருகிறது. மேலும் ஆம்புலன்ஸ் வசதி தேவைப்படுபவர்களும் 104 எண்ணை தொடர்பு கொண்டு உதவிப் பெறலாம். இதற்காக அனைத்துத் தனியார் மற்றும் அரசு ஆம்புலன்ஸ் சேவை வாகனங்களுடன் வார் ரூம் தொடர்பில் இருக்கிறது.

அதோடு அரசு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் பயணித்து கொண்டு இருக்கிறது என்பது உட்பட அனைத்து விவரங்களையும் இந்த வார் ரூம் கண்காணித்துக் கொண்டு இருக்கிறது. வார் ரூமை தொடர்பு கொண்டு ஆக்சிஜன் படுக்கை குறித்து விசாரிப்பவர்களுக்கு இந்த மையம் Code red எனும் குறியீட்டுடன் உடனடியாக படுக்கையை ஏற்பாடு செய்து கொடுக்கிறது. இந்த குறியீட்டு வசதிகளை யாரும் குறுக்கு வழியில் பயன்படுத்தி விட முடியாதபடி ரகசிய தொலைப் பேசி தொடர்பையும் வார் ரூம் மேற்கொள்கிறது.

மேலும் இந்த வார் ரூமை டிவிட்டரில் @104-GoTN என்ற ஐடியுடன் டேக் செய்தும் தேவையான உதவியைக் கோர முடியும். வார் ரூம் இணையப் பக்கத்தில் கொடுக்கப்பட்டு படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலமும் கொரோனா நோயாளிகள் தங்களுக்குத் தேவையான உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதோடு வார் ரூமில் நடக்கும் ஒவ்வொரு செயலும் அங்குள்ள பெரிய எல்சிடி திரைகளில் தொடர்ந்து ஒளிப்பரப்படுகிறது. இதனால் எத்தனை பேர் வார் ரூமை அழைத்தார்கள், ஆக்சிஜன் படுக்கை எவ்வளவு காலியாக உள்ளது? எத்தனைப் பேருக்கு பற்றாக்குறை இருக்கிறது? சிகிச்சை மருந்துகளின் நிலவரம் என்ன? என்பது போன்ற அனைத்து விவரங்களையும் அந்த திரையிலேயே தெரிந்து கொள்ளவும் முடியும்.

இப்படி வார் ரூமை தொடர்பு கொண்டு உதவிப் பெற்றவர்களை அதோடு கைவிட்டு விடுவதும் இல்லை. நோயாளிகளின் உறவினர்களை மதி எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் தொலைபேசி மூலம் மீண்டும் தொடர்பு கொள்கிறது. இதன் மூலம் நோயாளிகளின் தற்போதைய நிலை என்ன? தேவையான அனைத்து வசதிகளும் கிடைத்து விட்டதா? மேலும் எதாவது உதவி வேண்டுமா என்பது வரை விசாரணை நடக்கிறது. இதனால் வார் ரூம் ஒரு முழுமையான சேவை நோக்கத்தோடு கொரோனா நோயாளிகளுக்கு உற்ற நண்பனாக செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழ்நிலையில் வார் ரூமை ஒருநாளைக்கு 2,500 – 3,000 பேர் தொடர்பு கொள்வதாகவும் தமிழகச் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

More News

'வலிமை' படத்தில் அஜித்தின் வேற லெவல் ஆக்‌ஷன்: பிரபல நடிகர் தகவல்!

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது.

'குக் வித் கோமாளி' தீபாவா இது? வைரலாகும் திருமண புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருமே வேற லெவலில் பிரபலமானார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவாங்கி,

கொரோனா நிவாரண நிதியாக 'ஈஸ்வரன்' நாயகி கொடுத்த தொகை!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதால் தமிழக அரசு ஊரடங்கு உட்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விஜயகாந்த்-திற்கு வழக்கமான பரிசோதனை தான்.... தேமுதிக அறிக்கை...!

தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்கள்  உடல்நிலைக்குறைபாடு காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆக்சிஜன் அளவை உயர்த்த… இயற்கையான சில உணவு பொருட்கள்!

கொரோனா நேரத்தில் நோயாளிகள் முதற்கொண்டு அரசாங்கம் வரை அனைவரும் பயப்படும் ஒரு விஷயம் ஆக்சிஜன்.