கொரோனாவை சிறப்பாகக் கையாண்டு இந்திய அளவில் முன்மாதிரியாகத் திகழும் தமிழகம்!!! அதிரடி நடவடிக்கைகள்!!!

 

இந்திய அளவில் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் தரமான சிகிச்சை மற்றும் மருத்துவ நெறிமுறைகளினால் தற்போது குணமாகி வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தமிழகச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 81.4% மக்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்திய அளவில் கொரோனா பரிசோதனையை அதிகம் மேற்கொள்ளும் மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரமருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்து இருந்தார். நேற்று வரை தமிழகத்தில் 34,32,025 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் மிக அதிகமாக  ஒரே நாளில் (ஆகஸ்ட் 12) 71,515 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

அதைத்தவிர இந்தியாவிலேயே அதிகபட்சமாகத் தமிழகத்தில் 135 கொரோனா பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. அதில் 61 அரசு பரிசோதனை மையங்கள் மற்றும் 74 தனியார் பரிசோதனை மையங்கள் இருப்பதாக அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கொரோனா பயத்தோடு வீட்டில் இருக்கும் மக்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப் பட்டுள்ளன. அந்த வகையில் இணையதளம் மூலம் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவதற்கு இ-சஞ்சீவனி திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்மூலம் இதுவரை 44 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்திலும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்பது பெருமைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், கொரோனாவிற்குத் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பதற்கு வசதியாகத் தமிழகத்தில் அதிகளவில் அரசு மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதைத்தவிர மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் வலுவாக உள்ள மாநிலமாகத் தமிழகம் திகழ்வதும் மற்றொரு சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. இதற்காகத் தமிழகம் முழுவதும் 1,29,122 படுக்கைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் தகவல் அளிக்கப் பட்டுள்ளது. இதில் 56,482 படுக்கைகள் மருத்துவ மனைகளில் இருப்பதாகவும் 72,640 படுக்கைகள் கொரோனா மையங்களில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வெண்டிலேட்டர் வசதிகளுடன் 2,882 படுக்கைகள் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சையில் பிளாஸ்மா சிகிச்சை முறையும் தமிழகத்தில் கடந்த ஜுலை மாதத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. அதிலும் முன்மாதிரி மாநிலமாகத் தமிழகம் இருந்து வருகிறது. இதைத்தவிர தனித்த வகையில் தமிழகம் சில முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. கொரோனா அறிகுறியின் ஆரம்பக் கட்டத்திலேயே பரிசோதனை மேற்கொள்வது, நோயாளிகளோடு தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, அதிகம் கொரோனா பாதித்த நபர்களின் பகுதிகளை தீவிரக் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றுவது, கொரோனா அறிகுறி உள்ளவர்களைத்  தனிமைப்படுத்த மையங்களை உருவாக்கி அதில் 300 நபர்களுக்கு ஒரு அதிகாரியையும் பாதுகாப்புக்காக பணி அமர்த்துவது எனப் பல வழிமுறைகளையும் தமிழகம் மேற்கொண்டு வருகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் பாதிப்புகளைக் குறைப்பதற்காக வீடுதோறும் பரிசோதனைகளை மேற்கொள்வது, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் நுழைபவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவது, அவர்களில் அறிகுறி இல்லாதவர்களை மட்டும் வீட்டுக்கு அனுப்புவது, ஒருவேளை அறிகுறி இருந்தால் தீவிர கண்காணிப்புக்குக் கீழ் கொண்டு வருவது, அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் கொரோனா உறுதியானால் சிகிச்சை அளிப்பது, சிகிச்சையில் குணமடைந்தவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்புவது, தேவைக்கு அதிகமாக படுக்கை மற்றும் மருத்துவர்களை தயார் நிலையில் வைத்திருப்பது, மாவட்டம் தோறும் சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி  மக்களின் பதட்டத்தை குறைப்பது போன்ற பல்வேறு அதிரடி திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப் படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தல தோனிக்கு கொரோனா பரிசோதனை: ரிசல்ட் என்ன?

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு: கைது செய்யப்படுவாரா?

நடிகரு பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி!!! திடுக்கிட வைக்கும் பின்னணி!!!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலகத்திலேயே முதல்முறையாக ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 12 இல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்

167 வருட வரலாற்றில் இதுதான் முதல்முறை- திடுக்கிட வைக்கும் இந்திய ரயில்வே துறையின் அறிவிப்பு!!!

கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச் 23 இரவு முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

என் மனதில் தோன்றியதை டெலிபதியால் உணர்ந்தாரா விஜய்? தமிழ் நடிகர் ஆச்சரியம்

என் மனதில் தோன்றியதை டெலிபதி மூலம் உணர்ந்து தளபதி விஜய் செடி நட்டார் என்று தமிழ் நடிகர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது