close
Choose your channels

உள்ளாட்சி பதவிகளில் வெற்றி வாகை சூடிய பெண்கள்

Saturday, January 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெண்கள் கூட்டமாகப் பொது இடங்களில் பங்குகொள்ளும்போதும் பொதுப்பணிகளில்தங்களது கவனத்தைச் செலுத்தும்பொழுதும் பெரிய அளவிலான மாற்றங்களைக்கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை உலகளவில் பரவலாகக் காணப்படுகிறது. இத்தகைய ஒரு மாற்றங்களுக்கான முன்னோட்டமாகத்தான் தமிழகத்தில் முதன்முதலாக உள்ளாட்சி பதவிகளில்பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது எனலாம். 2016 இல் மறைந்தமுன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50சதவீத இடஒதுக்கீட்டினை அறிவித்தார். இதற்கு முன்னதாக 33 சதவீத இடஒதுக்கீடு மட்டுமேஇருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சி பதவிகளில் அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீடு முறையானது தற்பொழுதுநடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. உள்ளாட்சி பதவிகளில்இடஒதுக்கீட்டு முறையில் பெண்கள் தங்களுக்கான இடங்களைத் தக்கவைத்துக் கொள்ளும்போதுபாலினச் சமத்துவம் கிடைக்கப் பெறுவதுடன் உள்ளாட்சி அமைப்புகளில் தன்னிறைவை அடையமுடியும் என்ற நம்பிக்கையும் பொது மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லாம். இந்தநம்பிக்கைக்கு எதிர்ப்புறமாகப் பொம்மைகளைப் போல பெண்களை முன்னிறுத்தி வெற்றிப்பெறும் இத்தகைய பதவிகளுக்குப் பின்னால் ஆண்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது என்பதுபோன்ற குற்றச் சாட்டுகளும் எழுந்துள்ளன. இத்தகைய குற்றச்சாட்டுகளைத் தவிர்த்துவிட்டுஎண்ணிக்கை அடிப்படையில் பெண்களின் பலத்தையும் வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டுபார்க்கும்பொழுது 50 சதவீத இடஒதுக்கீட்டு முறையானது வரவேற்கத்தக்கது என்பது போன்றபாராட்டுகளும் ஒருபுறம் வந்துகொண்டே இருக்கின்றன. இந்தியளவில் இத்தகையஇடஒதுக்கீட்டு முறைகள் 20 மாநிலங்களில் மட்டுமே நடைமுறையில் இருக்கிறது என்பதும்குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தேர்தலில் பெண்களுக்கான வெற்றி வாய்ப்புகளைக் குறித்து அறிந்துகொள்வதுஅவசியமான ஒன்றாகும்.

ஒன்றியக் கவுன்சிலர் திருநங்கை ரியா

சமூகத்தில் அவமதிப்பை மட்டுமே சந்தித்துவந்த திருநங்கைகள் இன்றைக்குப் பலபட்டங்களையும் பதவிகளையும் பெற்றுவருவது சமூக அங்கீகரிப்பினை உணர்த்துகிறது எனலாம்.இத்தகைய முன்னேற்றங்களின் அடுத்தபடியாக அரசியலிலும் கால்பதித்துள்ளார் திருநங்கை ரியா.தன்னுள் பெண் தன்மை இருப்பதை உணர்ந்துகொண்டு பள்ளிப்படிப்பை நிறுத்திய ரியாமுழுமையாக திருநங்கையாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். மேலும் சமூகச்செயல்பாட்டு அமைப்பான ‘சகோதரன்’ அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டுசமூகப்பணிகளில் பங்காற்றியுள்ளார். அடிப்படையில் ரியாவின் குடும்பம் தி.மு.க பாரம்பரியத்தைச் சேர்ந்தது என்பதால் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க சின்னமானஉதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்துக்குட்பட்ட 2 வது வார்டில் போட்டியிட்டு அ.தி.மு.க.வேட்பாளரைவிட 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார் திருநங்கை ரியா. தமிழகவரலாற்றிலேயே ஒரு திருநங்கை முதன் முறையாகப் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார் என்பதுசமத்துவத்திற்கான முதற்படியாகக் கருதப்படுகிறது.

தனது வெற்றிக்குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஒன்றியக் கவுன்சிலர் திருநங்கை ரியாஅவர்கள், ‘இது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. பாரபட்சம் காட்டாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் நான் சேவை செய்வேன். முதற்கட்டமாக என் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டஅனைத்து மக்களுக்கும் குடியிருப்பு, குடிநீர், கழிவறை, சாக்கடை வசதி என அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க முயல்வேன். மக்கள் என்னைப் பாராட்டும்படி வாழ்வேன் என்பதேஎன்னுடைய லட்சியம்’ எனக் கூறியுள்ளார். அரசியலில் பெண்களுக்கான சமத்துவத்தினை எட்டியுள்ள முதல் உள்ளாட்சி தேர்தலில் திருநங்கை ஒருவர் வெற்றிப்பெற்றது மூன்றாம்பாலினத்தவர்களும் அரசியலில் தங்களது சமத்துவத்தினை ஏற்படுத்துவதற்கான முதற்படியாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

அரசு வேலையைத் துறந்து பஞ்சாயத்துத் தலைவரான துப்புரவு தொழிலாளர்

ஸ்ரீவில்லிப்புத்தூர் கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றியவர்சரஸ்வதி. அரசு பணியாளர் போட்டியிடக்கூடாது என்ற சட்டவிதி முறையைப் பின்பற்ற வேண்டி,தனது வேலையைத் துறந்து கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சித் தலைவராகப்போட்டியிட்டார். தேர்தல் ரத்தானாதால் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்பங்கேற்று வெற்றிப்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் துப்புரவு தொழிலாளியாகப்பணியாற்றிய பகுதியிலேயே போட்டியிட்டு வெற்றிப்பெற்று மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளார்சரஸ்வதி. இந்த வெற்றியின் மூலம் சமூகத்தின்மீது அக்கறையுள்ள எவர் வேண்டுமானாலும்வேட்பாளராகலாம் என்ற நம்பிக்கையைப் பெண்களின் மத்தியில் விதைத்துள்ளார்.

தாழாத வயதிலும் தளராத பெண்மணி

79 வயது மூதாட்டி வீரம்மாள் அழகப்பன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சிதலைவராகத் தேர்வாகியுள்ளது பெண்களின் மத்தியில் புது நம்பிக்கையையும் உத்வேகத்தையும்ஏற்படுத்தியுள்ளது எனலாம். மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டஅரிட்டாபட்டி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட வீரம்மாள் தனது வயதினைஒரு பொருட்டாகக் கருதாமல் வேட்பாளராகக் களமிறங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளதால்மிகுந்த வரவேற்பினைப் பெற்றவராக மாறியுள்ளார்.

அரசியலில் களம் கண்ட இளம் பெண்

கிருஷ்ணகிரி மாவட்டம், கே. என். தொட்டியில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டுகல்லூரி மாணவியான சந்தியா ராணி வெற்றிப்பெற்றுள்ளார். தற்போது பெண்களுக்கானஇடஒதுக்கீட்டு அடிப்படையில்தான் சந்தியா ராணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுவெற்றிப்பெற்றார் என்கிற ரீதியில் செய்திகள் வெளிவந்தாலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஒரு கல்லூரி மாணவி வெற்றிப்பெற்றது இதுவேமுதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அனுபவசாலிகளும் பலம் வாய்ந்தவர்களும் ஆதிக்கம்செலுத்திய அரசியல் களத்தில் 21 வயது மட்டுமே சந்தியா ராணி பங்கேற்று வெற்றிப்பெற்று இளம் தலைமுறையினருக்கே முன்னுதாரணமாக மாறியுள்ளார்.

73 வயதில் ஊராட்சி மன்றத் தலைவர்

இராமநாதபுரம், கமுதி ஒன்றியத்தில் 73 வயதான மூதாட்டி தங்கவேலு ஊராட்சி மன்றத்தலைவராகப் போட்டியிட்டு வெற்றிப்பெற்றதோடு தமிழக அரசின் சலுகைகளை முழுமையாகஎன்னுடைய பகுதி மக்களுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே எனது நோக்கம் எனவும் கருத்துக் கூறியுள்ளார்.

மேற்கண்ட பெண்மணிகளின் வெற்றியை 50 சதவீத இடஒதுக்கீட்டுப் பட்டியலின் கட்டாயம்என்றே புரிந்துகொண்டாலும் இத்தகைய வெற்றிகள் உள்ளாட்சி அமைப்புகளில் பெரியமாற்றங்களையும் ஏற்படுத்தும் என்பதோடு பெண்களின் வலிமையை அதிகமாக்கும்வழிமுறையாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்களின் தலையீடும் ஆதிக்கமும் உள்ள நமது சமூகத்தில் அரசியலில் தங்களது தனித்துவத்தினையும் முக்கியத்துவத்தினையும் உணர்ந்துகொண்டு பணியாற்ற வேண்டிய கடப்பாடுஉடையவர்களாகப் பெண்கள் காணப்படுகின்றனர். மேலும் பெண்களின் அறியாமையைக்காரணமாக்கும் சூழலைத் தவிர்ப்பதற்கு உள்ளாட்சி பதவிகளிலாவது வெற்றிப்பெற்றவர்களுக்குபயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்ற தேவையினை உண்டாக்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.