டெல்லியில் தோனியை சந்தித்த தமிழக அமைச்சர்: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,June 18 2021]

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று டெல்லி சென்றார் என்பதும் அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கு தேவையானவற்றை வலியுறுத்தினார் என்பதும் தெரிந்ததே. மேலும் இன்று அவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட பல தலைவர்களை சந்தித்து உள்ளார்

இந்த நிலையில் தமிழக முதல்வருடன் டெல்லி சென்ற அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகன் டெல்லியில் தல தோனியை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. டெல்லி சென்ற அமைச்சர் துரைமுருகன் தோனியை நேரில் சந்தித்து ’கிரிக்கெட்டில் தூள் கிளப்பினீர்கள் என புகழாரம் சூட்டிய தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் தோனி அவரது மனைவி சாக்ஷி மற்றும் தோனி மகளுடன் இணைந்து அவர் புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டார் என்பதும், இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது

ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தபோது தோனியை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார் என்பதும் அப்போது துரைமுருகனுக்கு தோனி ஆட்டோகிராப் போட்ட மஞ்சள் நிற டி-சர்ட்டை பரிசாக அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சுவிஸ் வங்கியில் குவிந்த இந்தியர்களின் பணம்!

சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய வங்கி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியர்களின் பணம் அந்நாட்டு வங்கிகளில் குவிந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

USஇல் கடந்த 2019 ஆம் ஆண்டே கொரோனா பாதிப்பு இருந்தது? வெளியான பகீர் தகவல்!

கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டே அமெரிக்காவின் 5 முக்கிய மாகாணங்களில் 7 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக சீனாவை சேர்ந்த தொற்றுநோயியல்

அப்பாக்களின் தினம்… இறுக்கத்தை விட்டு vaarta உடன் கொண்டாடுங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும் அப்பா எனும் ஒரு நபர் அந்த குடும்பத்தின் தூணாகவே இருந்து செயல்படுகிறார்.

ரகிட ரகிட: சரியான நேரத்தில் ரிலீஸ் செய்த பிங்க் பியூட்டி பிக்பாஸ் ஷிவானி!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் சரியாக 'ஜகமே தந்திரம்' ரிலீசான நேரத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ரகிட ரகிட ரகிட கேப்ஷனுடன் புகைப்படம்

சவால் விட்ட மதனுக்கு சவுக்கடி தந்த போலீஸ்...! கூட்டுக் களவாணிகள் கைதாகிறார்களா...?

ஆபாச மதன் கைது செய்யப்பட்ட நிலையில், அவனது தோழர்களையும் கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.