10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,May 17 2017]

சமீபத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரவுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கொட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் http://www.tnresults.nic.in ,http://www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி தேர்வு முடிவுகள் மாணவர்கள் அல்லது அவர்களது பெற்றோர்களின் மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும்
மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 25 ஆம் தேதி முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்றும் மறுகூட்டலுக்கு மே 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க தமிழ், ஆங்கிலத்துக்கு தலா ரூ.305, கட்டணமாகவும், மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205 கட்டணமாகவும் வசூல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

More News

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மிண்டும் வருமான வரித்துறையினர் ரெய்டு

இன்று காலை முதல் பிரபல எண்ணெய் மற்றும் குளிர்பான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வரும் நிலையில் தற்போது சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் இரண்டாவது முறையாக சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

சென்னை வெப்பநிலையில் திடீர் மாற்றம். பல இடங்களில் காற்றுடன் கூடிய மழை

சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வந்தது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் அதிகபட்ச வெப்பம் பதிவானதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் சென்னை மக்களை குளிர்விக்க திடீரென ஆச்சரியப்படும் வகையில் பலத்த காற்றுடன் கூடிய மழை ஒருசில இடங்களில் பெய்து வருகிறது...

'விவேகம்' அஜித்தை வேற லெவலுக்கு கொண்டு செல்லும். சிறுத்தை சிவா

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழுவினர் ஐரோப்பாவில் இருந்து சென்னை திரும்பிவிட்டனர். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் ஒருபுறமும், இன்னொரு புறம் இந்த படத்தின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...

அட்லி-ஜீவாவின் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. திரை முன்னோட்டம்

'ராஜா ராணி' மற்றும் 'தெறி' என இரண்டே படங்கள் இயக்கிய இயக்குனர் அட்லி, தனது உதவியாளரை இயக்குனராக்கி அழகுபார்க்கவே தயாரித்துள்ள திரைப்படம் தான் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'.

ரூ.500 கோடி படத்தின் நாயகன் இவரா? போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி ரூ.1500 கோடி வசூலை நெருங்கி கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் வசூல் கொடுத்த தைரியம் காரணமாக இந்தியாவில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்...