திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்!

  • IndiaGlitz, [Thursday,July 06 2017]

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி, மாநில அரசின் கேளிக்கை ஆகிய இரட்டை வரி விதிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த திங்கள் முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன. கடந்த நான்கு நாட்களாக நடந்து வந்த இந்த வேலைநிறுத்தத்தால் பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதோடு, திரையரங்க ஊழியர்கள், கேண்டீன்கள், பார்க்கிங் ஊழியர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திரையுலகினர் முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர்கள் ஆகியோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று மதியம் கேளிக்கை வரியை ரத்து செய்வது குறித்து தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் வேலுமணி, வீரமணி,கடம்பூர் ராஜு ஆகியோர்களுடன் திரைத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தமிழகத்தில் திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் வழக்கம்போல் திரையரங்குகள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கேசினோவில் ரஜினி: அரசியல்வாதிகளின் பகல் கனவு பலிக்குமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்காவில் கேசினோ கிளப் ஒன்றில் இருப்பது போன்ற புகைப்படம் கடந்த சில மணி நேரங்களாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் வெளியிட்டு, கேசினோ கிளப்பில் விளையாடும் ரஜினிக்கு அமெரிக்க டாலர்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்து அமல&#

திரைத்துறைக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் குரல் கொடுத்த ஸ்டாலின்

கடந்த 1ஆம் தேதி முதல் 'ஒரே நாடு ஒரே வரி' என்ற முழகத்துடன் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது...

பாவனாவின் திருமணத்தை தடுக்க முயற்சித்த விஐபி யார்?

கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் கேரள திரையுலகையே கதிகலங்க செய்தது. இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் பல்சர் சுனி கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது...

எம்.ஜி.ஆருக்கு பின் தமிழக அரசியலில் முதல்முறையாக நடந்த அதிசயம்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியுடன் கருத்துவேறுபாடு இருந்தாலும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைப்பதும்...

மோசமான பெண்கள் வாய்ப்புக்காக இதையும் செய்வார்கள்: பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு

பிரபல மலையாள நடிகர், எம்பி மற்றும் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' அமைப்பின் தலைவராக இருந்து வரும் இன்னொசெண்ட், மோசமான பெண்கள் மட்டுமே நடிக்க வாய்ப்பு கேட்டு படுக்கை வரை செல்வதாகவும், மலையாள திரையுலகை பொருத்தவரையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் யாரிடமும் இல்லை என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.