close
Choose your channels

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்!!!

Saturday, September 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்!!!

 

கொரோனா நெருக்கடி நிலைமையில் இருந்து தமிழகம் தற்போது மீண்டு வருவதாகத் தமிழக அரசு சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4 லட்சத்து 23 ஆயிரத்து 231 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்றும் இதுவரை மருத்துவமனைகளில் 49 ஆயிரத்து 203 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. இதனால் 53 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது என்ற தகவலையும் தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.

கொரோனா பயத்தோடு வீட்டில் இருக்கும் மக்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப் பட்டுள்ளன. அந்த வகையில் இணையதளம் மூலம் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவதற்கு இ-சஞ்சீவனி திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்காக தனி 118 ஆம்புலன்ஸ் சேவையையும் தமிழக முதல்வர் தொடங்கி வைத்து இருக்கிறார். கொரோனா அறிகுறிகளோடு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்க அம்மா கோவிட்-19 திட்டமும் அமல்படுத்தப் பட்டு இருக்கிறது.

மேலும், கொரோனாவிற்குத் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பதற்கு வசதியாகத் தமிழகத்தில் அதிகளவில் அரசு மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள் என்றும் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. அதைத்தவிர மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் வலுவாக உள்ள மாநிலமாகத் தமிழகம் திகழ்வதும் மற்றொரு சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. கொரோனா சிகிச்சையில் பிளாஸ்மா சிகிச்சை முறையும் தமிழகத்தில் கடந்த ஜுலை மாதத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. அதிலும் முன்மாதிரி மாநிலமாகத் தமிழகம் இருந்து வருகிறது.

இதைத்தவிர தனித்த வகையில் தமிழகம் சில முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. கொரோனா அறிகுறியின் ஆரம்பக் கட்டத்திலேயே பரிசோதனை மேற்கொள்வது, நோயாளிகளோடு தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, அதிகம் கொரோனா பாதித்த நபர்களின் பகுதிகளை தீவிரக் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றுவது, கொரோனா அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்த மையங்களை உருவாக்கி அதில் 300 நபர்களுக்கு ஒரு அதிகாரியையும் பாதுகாப்புக்காக பணி அமர்த்துவது எனப் பல வழிமுறைகளையும் தமிழகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய அளவில் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் தரமான சிகிச்சை மற்றும் மருத்துவ நெறிமுறைகளினால் தற்போது குணமாகி வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகத் தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்திய அளவில் கொரோனா பரிசோதனையை அதிகம் மேற்கொள்ளும் மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருகிறது. இதற்காக இந்தியாவிலேயே அதிகபட்சமாகத் தமிழகத்தில் 135 கொரோனா பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. அதில் 61 அரசு பரிசோதனை மையங்கள் மற்றும் 74 தனியார் பரிசோதனை மையங்கள் இருப்பதாக அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழக அரசின் இத்தகைய தொடர் நடவடிக்கைகளால் சென்னையில் தொடர்ந்து 7 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000 க்கும் கீழாக குறைந்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 12 ஆகவும் குறைந்துள்ளது. தமிழகத்தில் 10 ஆவது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்பு குறைவாக பதிவாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தகக்து. இதனால் கொரோனா நெருக்கடியில் இருந்து தமிழகம் இயல்பு நிலைமைக்கு திரும்புவதும் தொடங்கியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos