சென்னையில் மழை எப்படி இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

  • IndiaGlitz, [Friday,November 26 2021]

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் நேற்று முதல் விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் இன்றும் வரும் நாட்களிலும் சென்னை உள்பட தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடுவெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

சென்னை முதல் கடலூர் வரையிலான பகுதிகளில் மேகங்கள் சூழ்ந்து மழை பெய்வதால், இரவு முதல் காலை வரை தீவிரம் அதிகரிக்கும். கன்னியாகுமரியில் கனமழை பெய்யும்.

காயல்பட்டினத்தில் 300 மிமீ அளவில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி , தூத்துகுடி பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பெரும்பாலான இடங்களில் 60 முதல் 90 மி.மீ. மழையும், செம்பரபாக்கம், தாம்பரம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் கிட்டத்தட்ட 100 மிமீ மழையும் பெய்துள்ளது. நாகை 200 செமீ மழையை நெருங்கியுள்ளது. மேலும் நேற்று மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் 100 மி.மீ.மழை இன்று காலை வரை பெய்துள்ளது.

சென்னை முதல் நாகை வரை கனமழை முதல் மிக கனமழை வரை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டெல்டா முதல் ராமநாதபுரம் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், விழுப்புரம், நாகை, பெரம்பலூர், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவணாமலை கிழக்கு பகுதிகள், கள்ளக்குறிச்சி, அரியலூர், காரைக்கால், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துகுடி, சிவகங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய நகரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும்

நேற்று சென்னையில் பெரும்பாலான இடங்களில் 50-100 மிமீ மழை பெய்துள்ளது. நாளை சென்னையில் பெரும்பாலான நிலையங்கள் 100 மிமீ மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும் நல்ல மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 3-4 நாட்களுக்கு வட தமிழகம் முதல் தெற்கு தமிழக கடலோர பகுதிகளுக்கு கனமழை அச்சுறுத்தல் இருக்கும். தூத்துகுடி மற்றும் நாகை மாவட்டங்களில் ஏற்கனவே நல்ல மழை பெய்து வரும் நிலையில் அது தொடரும்.

கன்னியாகுமரியில் கனமழை இன்னும் 1-2 மணி நேரம் நீடித்து அதன்பின்னர் படிப்படியாக குறையும். மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
 

More News

தாமரைகிட்ட எல்லாரும் ஏமாறுறீங்க: அமீர் சொல்லும் திடுக்கிடும் விஷயம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது சூடுபிடித்துள்ளது என்பதும் குறிப்பாக இரண்டு போட்டியாளர்களின் வைல்ட்கார்ட்

உலக அளவில் கவனத்தை பெறும் சமந்தாவின் அடுத்த படம்

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை சமந்தா பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஒருவரின் வெப்தொடரில் நடிக்க உள்ளதை அடுத்து இந்த தொடர் உலக அளவில் கவனம்

உயிருக்குப் போராடும் தமிழ் நடிகருக்கு உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்!

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராகவும் நடிகராகவும் அறியப்படும் சிவசங்கர் மாஸ்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

படு குஷியாக வரலாற்று அதிசயங்களை சுற்றிக்காட்டும் தமிழ் நடிகை… மாஸ் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா.

இதுவரை இல்லாத புது கெட்டப்பில் நடிகை மல்லிகா ஷெராவத்… வைரல் புகைப்படம்!

பாலிவுட் சினிமா வட்டாரத்தில் கவர்ச்சி புயல் என அழைக்கப்பட்டவர் நடிகை மல்லிகா ஷெராவத். தன்னுடைய நடனம்