தமிழ்ப்பட இயக்குனரின் அதிரடி சலுகை அறிவிப்புகள்

  • IndiaGlitz, [Sunday,May 17 2020]

தமிழ் திரைப்பட உலகில் ’தமிழ் படம்’ ’தமிழ் படம் 2’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது சமூக வலைத்தளத்தில் பல அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் சிவா ஏர்போர்ட், சிவா பிணக்கிடங்கு, சிவா ரயில் நிலையம், சிவா சிறைச்சாலை, சிவா கடற்கரை, சிவா மின்சார வாரியம் ஆகிய படங்களை பதிவு செய்து, இவையெல்லாம் எனது எதிர்கால திட்டங்கள் என்றும், இந்த திட்டத்தில் மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மட்டும் தகுதியான இளம் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர்களுக்கு சலுகை வழங்க முடிவு செய்துள்ளேன் குறைந்த இடங்களே இருப்பதால் முந்துங்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

சி.எஸ்.அமுதனின் கேலியும் கிண்டலுமான இந்த புகைப்படம் குறித்த டுவிட்டுக்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தற்போது அறிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் சிஎஸ் அமுதன் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகை ப்ரியா பவானிசங்கருக்கு காதல் தோல்வியா?

சமீபத்தில் வெளியான 'மாஃபியா' உள்பட தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ள ப்ரியா பவானிசங்கர், சமீபத்தில் தனது கல்லூரி காலத்து நண்பர் ராஜவேல் என்பவரை காதலிப்பதாக செய்திகள் வெளியானது.

லாக்டவுனால் மீளமுடியாத கடன்: தூக்கில் தொங்கி நடிகர் தற்கொலை

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் ஏழை எளிய மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்

ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது! ஓவ்வோரு தடவையும் ஜெயிக்கணும்: சிவகார்த்திகேயனுக்கு டுவீட் போட்ட கலெக்டர்

தமிழகத்தில் சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

மணிரத்னம் படம் மிஸ் ஆனது எப்படி? மனம் திறந்த 'மாஸ்டர்' நடிகர்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஏற்கனவே கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலக பிரபலங்கள் அனைவரும் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

ஓடிடியில் வெளியாகும் ஐந்து மொழி திரைப்படம்: திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது