டுவிட்டர் ஓனர் எலான் மஸ்க் இடம் கோரிக்கை வைத்த தமிழ் இயக்குனர்!

உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரை 43 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் இடம் இளம் தமிழ் இயக்குனர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ் திரையுலகின் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன், ‘துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து அவர் ’நரகாசுரன்’ என்ற படத்தை இயக்கினார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் ரிலீசுக்கு தயாராகி பல ஆண்டுகள் ஆன பின்னரும் ஒருசில பொருளாதார பிரச்சினை காரணமாக ஐந்து ஆண்டுகளாக ரிலீசாகாமல் உள்ளது

இந்த படத்தை அடுத்து இயக்குனர் கார்த்திக் நரேன், ‘மாஃபியா’, ‘மாறன்’ ஆகிய படங்களையும் இயக்கி முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ட்விட்டர் ஓனர் எலான் மஸ்க்கிடம் தன்னுடைய ’நரகாசுரன்’ படத்தை வாங்கி ரிலீஸ் செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை குறித்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முயற்சிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

தஞ்சை தேர்த்திருவிழாவில் மின்கம்பி உரசி பயங்கர விபத்து: 11 பேர் பரிதாப பலி!

 தஞ்சையில் நடந்த தேர் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் பலியானதாகவும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

எலான் மஸ்க் வாங்கியதால் டுவிட்டரில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை!

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிவிட்டதை அடுத்து டுவிட்டரில் இருந்து தான் விலகுவதாக பிரபல நடிகை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

நடிகர் விமல் மீது மோசடி புகார் அளித்த தயாரிப்பாளர் கைது: மேலும் இருவர் மீது வழக்குப்பதிவு!

நடிகர் விஷால் மீது பணமோசடி புகார் அளித்த 'மன்னார் வகையறா' படத்தின் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் விமல் மீது புகார் அளித்த மேலும் இருவர் மீது 5 பிரிவுகளில்

மனைவிக்கு ஆசையாய் முத்தம் கொடுத்த 'கேஜிஎஃப்' யாஷ்: வைரல் புகைப்படங்கள்!

'கேஜிஎஃப்' நடிகர் யாஷ் தனது மனைவி ராதிகா பண்டிட் அவர்களுக்கு ஆசையாய் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

விஜய்யை சந்திக்க உதவி செய்த பிரபலம்: நன்றி கூறிய 'குக் வித் கோமாளி' ஷிவாங்கி!

தளபதி விஜய்யை சந்திக்க உதவி செய்த பிரபலத்திற்கு 'குக் வித் கோமாளி ஷிவாங்கி தனது நன்றியை தெரிவித்துள்ளார் .