ரஜினி அரசியலுக்கு வருவாரா? தமிழருவிமணியன் பரபரப்பு பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த நிலையில் விரைவில் அவர் அரசியலுக்கு வருவாரா? அல்லது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வராமல் ஆதரவு மட்டும் தெரிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்த நிலையில் மிக விரைவில் ரஜினியிடமிருந்து இது குறித்து விரிவான அறிக்கை ஒன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழருவி மணியன் அவரை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின்போது ரஜினியின் அரசியல் வருகை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ரஜினியை சந்தித்து விட்டு வெளியே வந்த தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘ரஜினி அரசியலுக்கு வருவாரா என எனக்கு தெரியாது. உங்கள் உடல் நலனுக்கு ஊறு விளைவிக்காத வகையில் முடிவு  எடுங்க என்று நான் சொன்னேன். உள்ளே பேசியதை  மீடியாவில் சொல்ல முடியாது’ என்று தெரிவித்தார். இதனால் ரஜினி அரசியல் நிலவரம் குறித்த மர்மம் நீண்டுகொண்டே போகிறது.
 

More News

வித்யாபாலனை இரவு விருந்துக்கு அழைத்தாரா அமைச்சர்? திடுக்கிடும் தகவல்!

பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனை மத்திய பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் இரவு விருந்துக்கு அழைத்ததாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பாமக மட்டுமல்ல.. பட்டியல், பழங்குடி இனத்தவருக்கும் இடஒதுக்கீடு… முதல்வரின் தொலைநோக்கு திட்டம்!!!

தமிழகத்தில் சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் விதிமுறைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து

திமிங்கலத்தின் வாந்தியால் ரூ.25 கோடிக்கு சொந்தக்காரரான மீனவன்… நெகிழ்ச்சி சம்பவம்!!!

வாந்தி என்ற சொல்லை நினைத்தாலே எல்லோருக்கும் குமட்டிக் கொண்டுதான் வரும். ஆனால் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு மீனவன்

சைக்கிளில் சென்ற தமிழ் ஹீரோவிடம் இருந்து செல்போனை பறித்த மர்ம நபர்கள்!

பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் சைக்கிளில் சென்னையின் முக்கிய சாலை ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருவர் அவருடைய விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பாலாஜியை கதறி அழவைத்த பிக்பாஸ்: லீக் ஆன வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளர் மட்டுமன்றி கரடுமுரடான போட்டியாளர் என்ற விமர்சனம் பாலாஜிக்கு உண்டு. எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் முகத்துக்கு நேரே பேசிவிடுவார்