close
Choose your channels

'சர்கார்' படத்திற்கு மீண்டும் புரமோஷன் செய்யும் தமிழிசை?

Monday, October 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்கார்' படம் குறித்து ஏற்கனவே பல சர்ச்சைகள் இருந்து வரும் நிலையில் தற்போது 'சர்கார்' படத்தின் டைட்டில் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது கமெண்ட்டை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சர்கார் என படத்தலைப்பு வைத்துள்ளவர்களுக்கே மக்களுக்கு நல்லது செய்ய இவ்வளவு ஆர்வம் என்றால், சர்காராக இருக்கும் எங்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

'சர்கார்' படம் குறித்தும் விஜய் குறித்தும் பேசி 'சர்கார்' படத்திற்கு புரமோஷன் செய்ய விரும்பவில்லை என கடந்த சில நாட்களுக்கு முன் கூறிய தமிழிசை செளந்திரராஜன் மீண்டும் அந்த படத்திற்கு புரமோஷன் செய்யும் வகையில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.