close
Choose your channels

கள்ளக்கதையில் 'கள்ள ஓட்டு படம்': சர்கார் படம் குறித்து தமிழிசையின் சர்ச்சை கருத்து

Monday, November 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த அனைத்து படங்களும் ரிலீசுக்கு முன்னரும், ரிலீசுக்கும் பின்னரும் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் 'சர்கார்' படத்திற்கும் அதேபோல் கதைப்பிரச்சனை வந்தது. ஒருவழியாக இந்த பிரச்சனை நீதிமன்றம் மற்றும் சமரசம் அடிப்படையில் முடிவடைந்து நாளை வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும் என்றும், கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர் என்றும், 'சர்கார்' படம் குறித்து மறைமுகமாக தாக்கியுள்ளார்.

இதே தமிழிசை செளந்திரராஜன் அவர்கள் தான் விஜய்யின் முந்தைய படமான 'மெர்சல்' திரைப்படம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து அந்த படத்திற்கு இலவச புரமோஷன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.