ஆளுனராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுகிறேன்: வசந்தகுமார் மறைவு குறித்து தமிழிசை

  • IndiaGlitz, [Saturday,August 29 2020]

நேற்று மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் அவர்கள் பழம்பெரும் அரசியல்வாதி குமரி அனந்தனின் சகோதரர் என்பதும், அவருடைய மகளும் தெலுங்கானா ஆளுனருமான தமிழிசை செளந்தராஜன் அவர்களின் சித்தப்பா என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனது சித்தப்பா மறைவு குறித்து தமிழிசை செளந்தரராஜன் அவரகள் கூறியதாவது:

சித்தப்பா :

நீங்கள்‌ இல்லை என்பதை என்‌ மனது நம்ப மறுக்கிறது...

என்‌ சிறு வயது முதல்‌ அவருக்கு திருமணம்‌ வரை ஒன்றாகவே வள்ந்தோம்‌..

அப்பா குமரி அனந்தனின்‌ அரசியல்‌ தாக்கம்‌ இரண்டு பேரிடமும்‌ இருந்தது
ஆனால்‌ வேறு வேறு பாதையில்‌ பயணித்தோம்‌...

இயக்கம்‌ வேறாக இருந்ததால்‌ இணக்கமாக இல்லையே தவிர இரத்தப்பாசம்‌
இருவரிடமும்‌ உண்டு,

தூரத்தில்‌ இருந்தே அவரின்‌ சுறுகறுப்பையும் துருதுருப்பையும்‌ கண்டு
வியந்திருக்கிறேன்‌..

'சிறுவயதில்‌ ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது , சண்டையிட்டது எல்லாம்‌.
நினைவிற்கு வருகிறது...

வசந்த்‌ அண்ட் கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலபேருக்கு பணிகொடுத்த
'தருமம்கூட காப்பாற்றவில்லையே என்று மனம்‌ பதைபதைக்கிறது...

கண்டிப்புடன்‌ கண்ணீரை அடக்க முயற்சித்தாலும்‌ ...
கரைபரண்டு கண்ணி பெருகுகிறது..

ஆளுநராக இருந்தாலும்‌

அண்ணன்‌ மகளாக அழுது கொண்டிருக்கிறேன்‌...

தமிழிசை செளந்தரராஜன்‌
 

 

More News

உலகின் அதிகவேகமான மனித கால்குலேட்டர்… 20 வயதில் சாதனை படைத்த இந்திய இளைஞர்!!!

பெங்களூரைச் சேர்ந்த சகுந்தலா தேவி உலகின் அதிகவேக மனிதக் கால்குலேட்டராகச் செயல்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து இருந்தார்.

ஐபிஎல் விளையாட சென்ற சிஎஸ்கே அணியில் கொரோனாவா? பரபரப்புத் தகவல்!!!

கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது

வடகொரியாவில் நடக்கும் அரசியல் மர்மங்கள்!!! பதற வைக்கும் பின்னணி!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருக்கிறார்.

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சி தகவல்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பியும், நடிகர் விஜய் வசந்தின் தந்தையும், பிரபல தொழிலதிபருமான வசந்தகுமார் சற்றுமுன் கொரோனாவுக்கு பலியானார். 

முதல்வர் பழனிசாமி தான் எங்கள் கடவுள்: 24 அரியர் வைத்திருந்த மாணவரின் வைரல் வீடியோ!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் நடத்த முடியாத நிலையில் சமீபத்தில் கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வு தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும்