ரஜினி ஆதரவு டுவீட்டுக்கு தமிழிசை செளந்திரராஜன் அதிரடி பதில்

  • IndiaGlitz, [Thursday,March 23 2017]

ஆர்.கே.நகர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கங்கை அமரன், சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அந்த சந்திப்பின்போது ஆர்.கே.நகர் தேர்தலில் கங்கை அமரன் வெற்றி பெற வாழ்த்தினார்
இதனால் ரஜினியின் ஆதரவு கங்கை அமரனுக்கே என்ற செய்தி பரவி வந்தது. இந்நிலையில் இன்று காலை ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்க போவதில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ''ரஜினி கங்கை அமரனுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதுபோதும். எங்கள் ஹீரோக்கள் மோடி மற்றும் அமித் ஷா தான்' என்று கூறினார்.
மேலும் ஆர்.கே.நகரில் கங்கை வெற்றி பெற்றால் 100 தாமரைகள் மலரும். மற்ற மாநிலங்களில் பா.ஜ.க பெற்ற வெற்றியின் தாக்கம் இங்கும் தொடரும். பா.ஜ.க. வெற்றி பெற்றால், ஆர்.கே.நகர் மோடியின் நேரடிப் பார்வைக்குச் செல்லும்' என்று கூறினார்.

More News

ஒரே நேரத்தில் பதவி உயர்வு பெற்ற டி.ராஜேந்தர்-சிம்பு

பிரபல இயக்குனரும் லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தரும் அவருடைய மகனும் நடிகருமான சிம்புவும் ஒரே நேரத்தில் பதவியுயர்வு பெற்றுள்ளனர்.

தனுஷின் முதல் முயற்சிக்கு சிம்பு கூறிய வாழ்த்து

தனுஷ் இயக்கிய முதல்படமான 'பவர்பாண்டி' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். ஓபிஎஸ்-சசிகலா அணியின் சின்னங்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளுக்கும் ஒன்றுபட்ட அதிமுகவின் சின்னமான இரட்டை இலை கிடையாது என்றும் அந்த சின்னம் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி

பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்.கே.நகரில் ஆதரவு யாருக்கு? ரஜினிகாந்த் அறிவிப்பு

கடந்த 1996ஆம் ஆண்டு தேர்தல் ரஜினியின் வாய்ஸ் காரணமாகவே ஆட்சி மாற்றம் நடந்ததாக கூறப்படுவதுண்டு.