close
Choose your channels

திரையுலகை சரி செய்யுங்கள், அரசியலை பின்பு பார்க்கலாம்: கமல்ஹாசனுக்கு தமிழிசை

Monday, July 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சிலநாட்களாகவே மீடியாக்களின் தலைப்பு செய்தியில் உலகநாயகன் கமல்ஹாசன் தான் இடம்பெற்று வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சை, தமிழக அரசு மீது அவர் வைக்கும் விமர்சனம், அமைச்சர்களின் பதிலடி, மு.க.ஸ்டாலினின் ஆதரவு, ஸ்டாலினுக்கு கமல் நன்றி என மீடியாக்களுக்கு பஞ்சமில்லாமல் பிரேக்கிங் நியூஸ்களை கமல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் சமீபத்திய விமர்சனங்களுக்கு பாஜகவின் தமிழக தலைவர் அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். கமல்ஹாசன் முதலில் திரைத்துறையின் குறைகளை சரி செய்யும் வேலையை செய்தால் போதும், அரசியலை பின்பு பாக்கலாம்' என்றும், கடந்த ஆண்டு துணிச்சலாக எந்த கருத்தையும் தெரிவிக்காத கமல்ஹாசன், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பேசுவதாகவும் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழிசை செளந்திரராஜனின் இந்த கருத்துக்கு கமல்ஹாசனின் ரசிகர் ஒருவர் டுவிட்டரில், 'நீங்கள் மருத்துவர் துறையை முதலில் பார்த்துவிட்டு பின்பு அரசியலுக்கு வாருங்கள்' என்ரு கூறியுள்ளார். மேலும் பலர் தமிழிசையின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.