தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய சுற்றறிக்கை

  • IndiaGlitz, [Thursday,April 13 2017]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் சமீபத்தில் முடிந்து அதன் தலைவராக தேர்வு செய்யப்பட்ட விஷால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நிமிடம் முதல் தங்களது பணியை தொடங்கிவிட்டதாகவும், ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் நல்லது செய்வதே தங்களது பணி என்றும் பதவியேற்கும்போது கூறினர். இந்நிலையில் தற்போது அவர்கள் கூறியபடியே தங்கள் பணியையும் தொடங்கிவிட்டனர்.
சற்றுமுன்னர் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை சென்றுள்ளது. அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அன்பார்ந்த தயாரிப்பாளர்களுக்கு, தங்களது நிலுவையில் உள்ள சாட்டிலைட் விற்காத, வெளியிடப்படாத அல்லது மானியம் கிடைக்கப்பெறாத படங்களின் விவரத்தை கீழ்க்கண்ட எண்/மின்னஞ்சலில் வரும் வெள்ளி மாலை 6.00 மணிக்குள் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

போதை கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

அழகில்லாத கணவனை கிரைண்டர் கல்லைத்தூக்கி போட்டு கொலை செய்த மனைவி, டீ போட்டு கொடுக்காத மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த கணவன் என்ற வரிசையில் இன்று 24 மணி நேரமும் போதையில் இருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை அவருடைய மனைவி ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று வடலூர் அருகே நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள ஆபத்தா

இந்தியாவில் இருந்து சட்டரீதியாக பிரிய தயார். இயக்குனர் கெளதமன்

டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இயக்குனர் கெளதமன் தலைமையில் சுமார் 50 இளைஞர்கள் பூட்டு போட்டனர்

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திற்கு பூட்டு போட்ட பிரபல இயக்குனர் கைது

தமிழக விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு வித்தியாசமான முறைகளில் தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

ஈழத்தமிழர் பிரச்சனை என்பது இதுதான். ராஜ்கிரண் கூறும் நிதர்சன உண்மை

உலகில் தீர்க்க முடியாத பல பிரச்சனைகளில் ஒன்று ஈழத்தமிழர் பிரச்சனை. இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று நார்வே உள்பட பல நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பலமுறை முயற்சி செய்தும் இன்னும் தீராத பிரச்சனையாக உள்ளது.

கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா 'கட்டப்பா' சத்யராஜ்?

உலகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி 'பாகுபலி 2' திரைப்படம் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் கர்நாடகத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.