ஜெயம் ரவியின் 'தமிழன் என்று சொல்லடா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,September 01 2020]

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடித்து வரும் படங்களில் ஒன்றான ’பூமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட்லுக், மூன்றாவது லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை ஏற்கனவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியை இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ’தமிழன் என்று சொல்லடா’ என்று தொடங்கும் இந்த பவர்புல் பாடல் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று டி.இமான் அறிவித்துள்ளார்.

ஜெயம் ரவி ஜோடியாக நிதிஅகர்வால் நடித்துள்ள இந்த படத்தில் ரோனிட் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். டட்லி ஒளிப்பதிவில் ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ’ரோமியோ ஜூலியட்’ மற்றும் ’போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முதல்வர் வங்கிக் கணக்கில் கைவைத்த பலே திருடங்கள்!!! 5 பேர் கைது மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

அசாம் மாநிலத்தில் முதல்வர் நிவாரணநிதி வங்கிக் கணக்கில் இருந்து 3.30 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

மகனுடன் பிளாஸ்மா தானம் செய்த பிரபல இசையமைப்பாளர்!

சமீபத்தில் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு

பிரபல காமெடி நடிகைக்கு நிச்சயதார்த்தம்: குவிந்த வாழ்த்துக்கள்

தமிழ் திரை உலக பிரபல காமெடி நடிகைக்கு நிச்சயதார்த்தம் ஆனதை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்

பா ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: நாயகன் நாயகி யார்?

பிரபல இயக்குனர் பா ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில் குறித்து அறிவிப்பு வெளி வந்துள்ளது என்பதும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது

ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் இல்ல- மன அழுத்தத்தில் மாணவி எலி மருந்து குடித்த பரிதாபம்!!!

கள்ளக்குறிச்சி அடுத்த உளுந்தூர்பேட்டையில் 1 ஸ்மார்ட்போனை வைத்து 3 சகோதரிகள் ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வந்துள்ளனர்.