காதல், திருமணம் குறித்து தமன்னா கூறிய அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,July 28 2018]

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா, டாக்டர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவர் விரைவில் அந்த டாக்டரை திருமணம் செய்யவுள்ளதாகவும் ஒருசில இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து தமன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர், அதன் பின்னர் கிரிக்கெட் வீரர் தற்போது டாக்டர். என எனது காதல் வதந்திகள் பரவி வருகின்றது. நான் எனது கணவரை தேடி அலைந்து கடைகடையாக அலைந்து கொண்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை இந்த வதந்திகள் ஏற்படுத்தி வருகின்றன. எந்தவித ஆதாரமும் இல்லாத செய்தியை நான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை

நான் இப்போது சிங்கிளாக மகிழ்ச்சியாக இருக்கிறேன், என்னுடைய பெற்றோர்கள் எனக்கு தற்போது மாப்பிள்ளை தேடவில்லை. இப்போதைக்கு என்னுடைய கவனம் முழுவதும் சினிமாதால் உள்ளது. எனக்கு யார் மீதும் காதல் ஏற்படவில்லை. நான் படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கும்போது காதல் எப்படி வரும். இது போன்ற வதந்திகள் எங்கிருந்து, எதற்காக கிளம்புகின்றன என்பது எனக்கு தெரியவில்லை.

இந்த வகையான வதந்திகள் மரியாதை குறைவானது. திருமணம் என்பது புனிதமான ஒன்று. அந்த முடிவை எடுக்கும்போது நிச்சயம் இந்த உலகிற்கு நானே தெரிவிப்பேன். எனவே இதுகுறித்து கற்பனையாக தகவல்களை வெளியிட வேண்டாம். இவ்வாறு வெளிவந்து கொண்டிருக்கும் வதந்திகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்' என்று தமன்னா கூறியுள்ளார்.

More News

கருணாநிதிக்கு ரத்த அழுத்த குறைவு: நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

கருணாநிதி உடல்நலத்தை விசாரித்த ரஜினிகாந்த்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

விக்னேஷ் சிவன் கூறிய பிறந்த நாள் வாழ்த்து: யாருக்கு தெரியுமா?

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணைந்த மெர்சல்-சர்கார் கூட்டணி

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பாடலாசிரியர் விவேக், விஜய் நடித்து வரும் அடுத்த படமான 'சர்கார்' படத்திலும் இணைந்துள்ளனர்

முதலமைச்சர் மகன் கேரக்டரில் கார்த்தி?

முன்னாள் ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒன்று தெலுங்கில் 'யாத்ரா' என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. என்பதும்