கோபுரத்தில் ஒலித்த தமிழ் மந்திரங்கள்..! 23 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக நடந்த தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு.

ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து வானுயுயர்ந்த விமான கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. உலகப் பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாக திகழும் இக்கோயில் தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் உலகப் புகழ் பெற்று விளங்கி வருகிறது.

சோழர்களின் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் இருந்துவரும் இக்கோயிலின் கட்டுமானத்தை எண்ணி உலக மக்கள் அனைவரும் அதிசயித்து வியந்து வருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க பெரிய கோயில் குடமுழுக்கு கடந்த முறை 1997-ம் ஆண்டு நடைபெற்றது.

திரும்பவும் குடமுழுக்கு நடத்த வேண்டும் என ஆன்மிக ஆர்வலர்கள், பெரிய கோயிலின் மீது பெரும் மதிப்பு கொண்டவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தனர். அதன்படி 23 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் விமரிசையாக லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.

110 யாக குண்டங்களுடன் 11,900 சதுர பரப்பளவில் கோயிலுக்கு வெளியே வலதுபுறத்தில் அமைக்கப்பட்ட யாகசாலை பந்தலில் கடந்த 1-ம் தேதி குடமுழுக்கிற்கான யாக பூஜை நடைபெற்றன. 8 காலங்களாக நடைபெற்ற இந்த யாகத்தில் சுமார் 300 சிவாச்சார்யர்கள், தமிழ் ஓதுவார்கள் 80 பேர் கலந்துகொண்டனர். 2,600 கிலோ எடை கொண்ட 124 வகையான மூலிகைப் பொருள்கள் இந்த யாக பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டன.

தஞ்சை குடமுழுக்கில் தமிழ் மற்றும் சமாஸ்கிருதத்தில் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் தஞ்சையில் குவிந்துள்ளனர். சுமார் 5000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

More News

சுற்றுச்சூழல் பிரச்சாரம் - அண்டார்டிக்காவின் உருகும் பனிப்பாறைகளுக்கு நடுவே ஒரு நீச்சல் பயணம்

ஒரு ஆய்வில் கீரின்லாந்தில் பனிப்பாறைகளின் உருகும் தன்மை அதிகரித்து விட்டதை கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்

மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்து வருமான வரித்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நடிகர் விஜய்..!

படப்பிடிப்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வருமான வரித்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் விஜய் இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மோடி செங்கோட்டையையும் தாஜ்மஹாலையும் கூட தனியாருக்கு விற்க போகிறார்..! ராகுல் காந்தி விமர்சனம்.

. 'மேக் இன் இந்தியா' என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார் பிரதமர், ஆனால் இன்று வரை ஒரு தொழிசாலை கூட இந்தியாவில் தொடங்கப்படாதது வேதனை அளிக்கிறது என்று கூறினார் ராகுல்.

“வால்க தமில்” – தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு ரத்தினை கிண்டலித்த எஸ்.வி.சேகர்

முன்னதாக, தமிழகப் பள்ளிகளில் படிக்கும் 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப் படும் என்று பள்ளிக் கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

எது சிறந்த கல்வி முறை? பள்ளிகளில் தேர்வுகள் கண்டிப்பாக வைக்க வேண்டுமா? உலக நாடுகளின் கல்வி முறை என்ன சொல்கிறது???

உலக அளவில் கல்வி முறைகளில் மாற்றம் வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கின்றன.