எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகி: இன்று முதல் படப்பிடிப்பு!

  • IndiaGlitz, [Friday,October 09 2020]

சசிகுமார் நடித்த ’சுந்தரபாண்டியன்’, உதயநிதி நடித்த ’இது கதிர்வேலன் காதலன்’, விக்ரம் பிரபு நடித்த ’சத்ரியன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இவர் இயக்கிய ’கொம்பு வச்ச சிங்கம்’ என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இவர் தனது பாணியில் மற்றொரு கிரைம் திரில்லர் படம் ஒன்றை தொடங்கி உள்ளார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் தன்யா ரவிச்சந்திரன் நடிக்க உள்ளார். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான இவர், விஜய் சேதுபதி நடித்த ’கருப்பன்’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் ஜெயபிரகாஷ் நடிக்க உள்ளார்

எஸ்.ஆர்.பிரபாகரனின் சொந்த நிறுவனமான பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது

More News

மருத்துவமனையின் அறிக்கையால் மகிழ்ச்சி அடைந்த விஜயகாந்த் தொண்டர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு

உண்மை ஒருநாள் வெல்லும்: சூரி விவகாரம் குறித்து விளக்கமளித்த விஷ்ணுவிஷால்!

நடிகர் சூரியிடம் இடம் வாங்கி கொடுப்பதாக 2.7 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் இதுகுறித்து சூரி, அடையாறு காவல்நிலையத்தில் அளித்த புகார் குறித்து வெளிவந்த தகவலை இன்று காலை ஏற்கனவே பார்த்தோம் 

பிக்பாஸ் வீட்டில் ஷிவானி இருக்க தகுதியற்றவரா? சம்யூக்தா அதிரடி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரமோவில் 'கடந்து வந்த பாதை என்ற டாஸ்க்' இரண்டு கட்டமாக முடிவடைந்த நிலையில் இந்த வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள்

மீண்டும் தென்னிந்திய படத்தில் அமிதாப்பச்சன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

பாகுபலி' நாயகன் பிரபாஸ் தற்போது 'ராதே ஷ்யாம்' மற்றும் 'நடிகையர் திலகம்' இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

பாலியல் வன்கொடுமையால் 11 வயது சிறுமி தற்கொலை!!! கேடுகெட்ட சம்பவத்துக்கு தாயும் உடந்தையா???

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று 11 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.