பிகினி உடையில் மணியடித்து தத்துவ மழை பொழிந்த டாப்சி

  • IndiaGlitz, [Saturday,October 10 2020]

தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி. இவர் கடந்த சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் என்பதும், தற்போது விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படம் உள்பட 6 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை டாப்ஸி அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாகவும், சமூக சிந்தனையுடனும் கூடிய பதிவுகளை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது பிகினி உடையில் மணியடிக்கும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அதில் ஒரு தத்துவ மழையையும் பொழிந்துள்ளார்.

புதிய ஆண்டில் ஒலிக்கும் ஒலியை தான் கேட்க விரும்புவதாகவும், 2020ஆம் ஆண்டு மோசமாக இருந்த நிலையில் அதனை கருத்தில் கொண்டு நான் சொல்வேன், புத்தாண்டில் புதிய ஒலி கிடைக்கட்டும் என்றும் டாப்ஸி கூறியுள்ளார். மேலும் இந்த பதிவில் பிகினி உடையுடன் ஒரு பெரிய மணியை ஒலிக்கவைக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டாப்ஸியின் இந்த புகைப்படமும் அவரது பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.

More News

பாலாஜி முருகதாஸ்: சொந்த கதை டாஸ்க்கில் அசத்திய ஒரே போட்டியாளர் 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 4 நாட்களாக போட்டியாளர்கள் தங்களுடைய சொந்த கதையை கூறிக்கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் பலருடைய கதைகள் சுவராசியம் இல்லாமல் இருந்த நிலையில்

சோகக் கதையைக் கூட சிரித்துக்கொண்டே கூறிய ரம்யா பாண்டியன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் சிரித்த முகத்தோடு இருக்கும் ஒரே போட்டியாளர் ரம்யா பாண்டியன் தான் என்பது அவரது ஆர்மியினர்களின் கருத்தாக உள்ளது.

எனக்கு தமிழ் சொல்லி தாருங்கள்: தமிழ் நடிகரிடம் வேண்டுகோள் விடுத்த அக்சய்குமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' என்ற தமிழ் படத்திலும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகருமான அக்சய்குமார் தற்போது 'பெல்பாட்டம்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்

நட்புக்கரம் நீட்டிக்கொண்டே டிக் டாக்கிற்கு முடிவுக்கட்டிய பாகிஸ்தான்… தெறிக்கவிடும் பின்னணி!!!

ஒழுக்கக் கேடான மற்றும் அநாகரிகமான வீடியோக்கள் வெளியிடுப்படுவதாகக் கூறி பாகிஸ்தான் அரசாங்கம் நேற்று டிக் டாக் செயலிக்கு தடை விதித்து இருக்கிறது.

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உயர்வு!!! தளர்வுகள் காரணமா???

சென்னையில் கடந்த மே, ஜுன் மாதங்களில் கொரோனா தாக்கம் காரணமாக அதிக இடங்கள் சீல் வைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக, சென்னை மாநகராட்சி அறிவித்து இருந்தது.