close
Choose your channels

'ஆதிபுருஷ்' வெளியாகும் திரையரங்குகளில் ஒரு இருக்கை காலி.. அனுமனுக்காகவா?

Tuesday, June 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு ’ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் தமிழ் ஐந்து மொழிகளில் உருவாகி உள்ளது என்று தெரிந்தது.

வரும் 16ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை படைத்தது.

இந்த நிலையில் ’ஆதிபுருஷ்’படம் வெளியாகும் திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இருக்கை காலியாக விடப்போவதாக படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஒரு இருக்கை அனுமனுக்காக ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் ’அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தில் உருவமாக விளங்கும் அனுமனுக்கு மரியாதை செலுத்த கூடிய வகையில் ’ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு திரை அரங்குகளிலும் ஒரு இருக்கையை காலியாக வைக்க போகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.