close
Choose your channels

சூர்யாவின் 'என்.ஜி.கே'வுடன் இணையும் கார்த்தியின் 'கைதி'!

Sunday, May 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான 'என்.ஜி.கே' திரைப்படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் ஓப்பனிங் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வரும் 30ஆம் தேதி 'என்.ஜி.கே. வெளியாகும் திரையரங்குகள் அனைத்திலும் கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' படத்தின் டீசர் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'என்.ஜி.கே' மற்றும் 'கைதி' ஆகிய இரண்டு படங்களையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகி, ரொமான்ஸ், காமெடி இல்லாமல் முழுக்க முழுக்க விறுவிறுப்பு சஸ்பென்ஸ் உடன் கூடிய 'கைதி' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜூலை இரண்டாவது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.