அஜித் எனக்கு கொடுத்த பரிசில் ஒரு டெக்னிக்கல் பிழை: விவேக்

  • IndiaGlitz, [Sunday,May 07 2017]

அஜித் நடித்த 'காதல் மன்னன்', 'வாலி', முதல் 'என்னை அறிந்தால்' வரை பல படங்களில் இணைந்து நடித்தவர் காமெடி நடிகர் விவேக். இவர் அஜித் தனக்கு கொடுத்த ஒரு பரிசு குறித்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. அஜித்தும் விவேக்கும் ஒருநாள் காரில் சென்று கொண்டிருந்தபோது, அஜித் கையில் இருந்த ரோலக்ஸ் வாட்ச் விவேக்கை மிகவும் கவர்ந்ததாகவும், அந்த வாட்சின் அழகை பார்த்து பிரமித்த விவேக், என்றாவது ஒருநாள் தானும் அதுபோன்ற ஒரு வாட்சை வாங்கிவிடுவேன் என்றும் கூறினாராம். உடனே சற்றும் யோசிக்காமல், அஜித் தனது கையில் இருந்த வாட்சை கழட்டி விவேக்கில் கையில் அணிவித்ததாகவும், இதை பார்த்து விவேக் மெய்மறந்து போனதாகவும் ஒரு செய்தி உலாவி வந்தது.

இந்த செய்தி குறித்து ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த விவேக், 'இந்த செய்தியில் கூறியபடி அப்படியே நடக்கவில்லை. ஆனால் இப்போது அது பெரிய விஷயமில்லை. இந்த செய்தியில் ஒரு டெக்னிக்கல் பிழையும் உள்ளது. அஜித் எனக்கு பரிசாக கொடுத்தது ரோலக்ஸ் அல்ல, செய்கோ(Seiko) வாட்ச் என்றும், அஜித்தின் சிறந்த குணத்திற்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு சிறந்த உதாரணம் என்றும் விவேக் கூறியுள்ளார்.

More News

இந்த முட்டாள்களை திருத்தவே முடியாது. நாம் நம் வேலையை பார்ப்போம். குஷ்பு

சமூக வலைத்தளங்கள் என்பது பொதுமக்களுக்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கின்றதோ, அந்த அளவுக்கு சர்ச்சைகளை ஏற்படுத்தும் ஒரு களமாகவும் உள்ளது. குறிப்பாக டுவிட்டரில் ட்ரோல் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது...

அட்லியின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்

'ராஜா ராணி', 'தெறி' ஆகிய இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி, தற்போது இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

இன்று இந்திய சினிமா சரித்திரத்தின் பொன்னாள்: 'பாகுபலி'யால் கிடைத்த கெளரவம்

100 வருட இந்திய சினிமா சரித்திரத்தில் ஒரு திரைப்படம், அதுவும் ஒரு தென்னிந்திய திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றதோடு முதல்முறையாக ரு.1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இந்த பெருமையை இந்திய சினிமாவுக்கு கொடுத்த படம் 'பாகுபலி 2'...

விஷால்-கார்த்திக் கூட்டணியில் இணைந்த பிரபல தயாரிப்பாளர்-நடிகர்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரபுதேவா இயக்கும் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' திரைப்படத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் கிடைத்த சம்பள பணம் முழுவதையும் இருவரும் நடிகர் சங்க கட்டிட நிதிக்கு கொடுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது...

ஏ.ஆர்.ரஹ்மானின் இயக்குனர் அனுபவம் குறித்த வீடியோ விருந்து

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் முதன்முதலில் Le Mask என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை அவர் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்...