பேர்டு பாக்ஸ் சேலஞ்ச்: 17 வயது இளம்பெண்ணால் ஏற்பட்ட விபத்து

  • IndiaGlitz, [Sunday,January 13 2019]

கடந்த சில ஆண்டுகளாக விபரீதமான சேலஞ்சுகள் உலகம் முழுவதும் வைரலாகி விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போதும் அதேபோன்று 'பேர்டு பாக்ஸ் சேலஞ்ச்' என்ற ஆபத்தான சேலஞ்ச் பரவி வருகிறது.

ஐஸ்பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது வைரலாகும் இந்த பேர்டு பாக்ஸ் சேலஞ்ச்சில் கண்களைக் கட்டிக் கொண்டு வேகமாக ஓடி செல்ல வேண்டும். அப்போது எதிரே எந்த பொருள் இருந்தாலும் அதில் சென்று முட்டிக் கொள்ளவேண்டும் என்பதே இந்த சேலஞ்ச் ஆகும். இந்த சேலஞ்சை ஒருசிலர் காரில் செல்லும்போது செய்வதால் அவ்வப்போது விபத்துக்களும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள Layton என்ற பகுதியில் 17 வயது இளம்பெண் ஒருவர் இந்த 'பேர்டு பாக்ஸ் சேலஞ்ச்சில் கண்களை மூடிக்கொண்டு காரை ஓட்டியதால் அவர் பாதை மாறி சென்றதோடு, எதிரே ஒரு வந்த ஒரு காருடன் மோதியுள்ளார். இந்த விபத்தில் இரண்டு கார்களும் சேதமடைந்த போதிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதுபோன்ற ஆபத்தான சேலஞ்ச்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

More News

ஆஸ்திரேலியாவில் தமிழ்க்கடவுளை கண்டுபிடித்த யோகிபாபு

கோலிவுட் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் யோகிபாபு. விஜய் உள்பட முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

நீங்க சொன்னா சினிமா இண்டஸ்ட்ரியே சொன்ன மாதிரி! ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கணவருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுத்த ஜெ.தீபா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா சமீபத்தில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்.

'தளபதி 63' படத்தில் இணைந்த பா.ரஞ்சித் பட ஹீரோ?

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நேரலை பார்க்க உதவும் செயலி

தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டியை நீதிமன்றம் தடை செய்திருந்த நிலையில் இளைஞர்களின் எழுச்சியால் அந்த தடை உடைக்கப்பட்டு க