நாயுடன் செல்பி: இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்

இன்றைய இளைஞர்களிடம் செல்பி மோகம் மிகவும் அதிகம் உள்ளது என்பதும் மிகவும் ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து ஆபத்தில் மாட்டிக் கொள்வதும் சில சமயம் உயிரிழப்பதுமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருவதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் 17 வயது இளம்பெண் ஒருவர் நாயுடன் செல்பி எடுக்க முயன்றதால் ஏற்பட்ட விபரீத சம்பவம் அர்ஜெண்டினாவில் நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.

அர்ஜெண்டினாவை சேர்ந்த லாரா சன்சோன் என்ற 17 வயது இளம்பெண் தனது தோழியின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் விதவிதமான போஸ்களில் செல்ஃபி எடுத்தார். அப்போது அவரது நாயின் வாயில் அருகே தனது முகத்தை வைத்து அவர் செல்பி எடுக்க முயன்ற போது திடீரென அவர் முகத்தை முகத்தில் கடித்தது. இதனால் முகம் முழுவதும் படுகாயம் அடைந்த அவருக்கு 40 தையல்கள் போடப்பட்டு உள்ளது.

செல்லப் பிராணிகளுடன் செல்பி எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அத்துமீறி செல்பி எடுத்தால் இதுபோன்ற விபரீதங்கள் நடக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.