வகுப்பறையில் தாலி கட்டிய பள்ளி மாணவன்… வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை!!!

  • IndiaGlitz, [Tuesday,December 22 2020]

 

கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி வெளியான ஒரு வீடியோவில் ஒரு பள்ளி மாணவன் தன்னுடன் பயிலும் ஒரு மாணவிக்கு வகுப்பறையில் வைத்தே தாலிக் கட்டுகிறார். அதோடு குங்குமத்தையும் வைக்கிறார். இந்தக் காட்சி இணையத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் திருமண பாதுகாப்புத் தடைச்சட்டம் 2006 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலம் தெற்கு கோதாவரி பகுதியில் இயங்கி வரும் ஒரு அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பள்ளி மாணவன், தன் சக வகுப்பு மாணவிக்கு தாலிக் கட்டுகிறார். அதுவும் வகுப்பறையில் வைத்து. மேலும் இந்த திருமணத்தை ஒரு பெண் அருகில் இருந்தவாறு வீடியோ எடுக்கிறார். திருமணத்திற்கு பிறகு அந்த வீடியோவை இணையத்திலும் மாணவர் வெளியிடுகிறார். இதனால் அம்மாநிலத்தில் கடும் பரபரப்பு கிளம்பியது.

17 வயதுடைய பள்ளி மாணவன் திருமணம் செய்து கொண்டதால் அம்மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட மாணவியை அவருடைய குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாமல் வீட்டை விட்டு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்த மகிலா பெண்கள் அமைப்பினர் அந்தப் பெண்ணிற்கு ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளனர். சிறுவயதில் திருமணம் நடந்த திருமணத்தால் ஆந்திர மாநிலத்தில் கடும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் வகுப்பறையில் திருமணம் செய்து கொண்ட இருவர் மற்றும் உதவி செய்த ஒரு பெண் ஆகியோரைக் கண்டித்து அந்தப் பள்ளி நிர்வாகம் டிசி கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

ஒரு சின்ன உதவியால் நடந்த பெரும் டிவிஸ்ட்… நெகிழ்ச்சி சம்பவம்!!!

பிரேசில் நாட்டில் பிச்சைக்காரனுக்கு முடித்திருத்தம் செய்ததால் அதுவே இறுதியில் பெரும் டிவிஸ்டாக மாறி இருக்கிறது.

வில்லன் நடிகருக்கு கோவில் கட்டிய கிராமத்து மக்கள்!

தமிழகத்தில் குஷ்பு உள்பட ஒரு சில நடிகைகளுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிராமத்து மக்கள் வில்லன் நடிகர் ஒருவருக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வருவது

அப்படியா சொன்னேன்: ஆச்சரியமாக கேட்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து!

சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை தங்களுடைய விருப்பத்துக்குரிய நடிகர் நடித்து வரும் திரைப்படங்களின் அப்டேட்டுக்களை கேட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்வது ஒரு வாடிக்கையாகிவிட்டது.

பெராரி காரா, மெட்ரோ ரயிலா, எது சிறந்தது? தமிழ் நடிகரின் பதிவு

சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்று மெட்ரோ ரயில் என்பதும் குறைந்த கட்டணத்தில் மிக விரைவாக எந்தவித போக்குவரத்து இடையூறுமின்றி செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான

பட்டப்பகலில் நடுரோட்டில் காதலியை அரிவாளால் வெட்டிய காதலன்: வீடியோ எடுத்த பொதுமக்கள்!

பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் ஒருவர் தனது காதலியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொண்டிருந்த நிலையில் சுற்றி நின்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்ததோடு தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தது