கவின் நடிக்கும் 'ஊர்க்குருவி' படத்தில் நாயகியாகும் டிவி சீரியல் நடிகை!

  • IndiaGlitz, [Friday,October 22 2021]

கவின் நடத்த ’லிப்ட்’ திரைப்படம் நல்ல வெற்றி அடைந்ததை அடுத்து அவருடைய அடுத்தப் படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு ‘ஊர்க்குருவி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தை விக்னேஷ் சிவனின் உதவியாளர் அருண் பேட்ரிசியான் என்பவர் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை சம்பவத்தின் அடிப்படையாக கொண்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தெரியவந்து உள்ளது.

இந்த படத்தில் நாயகியாக காவ்யா அறிவுமணி என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே ’பாண்டியன் ஸ்டோர்’ என்ற சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் பாரதிகண்ணம்மா சீரியல் இவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எப்படி இருக்க கூடாது: அபிஷேக், ப்ரியங்காவை குறி வைத்த போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று நடைபெற்ற டாஸ்க்கில் பிரியங்கா மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் சக போட்டியாளர்களால்

மாற்றுத்திறனாளி திருமூர்த்தி பாடலை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' என்ற பாடலை பாடி சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனவர் மாற்றுத்திறனாளி திருமூர்த்தி என்பதும்,

ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் யோகிபாபு படம்!

பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடித்த படம் ஒன்று ஆஸ்கார் விருது செல்லும் பட்டியலில் இடம் பெற்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கமல் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்?

உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் வரும் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினம் கமல் ரசிகர்களுக்கு ஒரு எதிர்பாராத சர்ப்ரைஸ் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நாங்க செலவு செஞ்ச பணம் கூட சம்பளமா கிடைக்கல: நாடியா சாங் குடும்பத்தினர் அதிருப்தி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நாங்கள் செலவு செய்த பணம் கூட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக கொடுக்கப்படும் சம்பளம் இல்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது