இவங்களுக்காக சினிமா வாய்ப்பை மறுத்தேன்.....! பிரபல இளம் சீரியல் நடிகை.....!

  • IndiaGlitz, [Saturday,August 28 2021]

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிவரும் இதயத்தை திருடாதே சீரியல் மூலம், கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவனம் ஈர்த்தவர் தான் நடிகை ஹிமா பிந்து. ஆந்திராவை சொந்த ஊராக கொண்ட இவரின் குடும்பம் சினிமா பின்னணி கொண்டது. இதனால் சிறுவயது முதலே டான்ஸ், பாட்டு, நடிப்பு போன்றவற்றில் ஆர்வமாக இருந்துள்ளதால், அனைத்தையும் கற்றுக்கொண்டுள்ளார் ஹிமா. பேஷன் டிசைனிங் படித்துக்கொண்டிருக்கும் போது இவருக்கு சினிமா வாய்ப்புகள் வர துவங்கியது, அப்போது பெற்றோர்கள் சம்மதிக்காததால், படிப்பை தொடர்ந்துள்ளார். இதையடுத்து இறுதியாண்டு கல்லூரி படிக்கையில் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ‘ஐஆர் 8’ என்ற திரைப்படம் ஒன்றில் நடிகையாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஹிமாவிற்கு வெள்ளித்திரையிலும் பல வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இதயத்தை திருடாதே தொடர் 1-ஆம் முடிந்து, 2ஆம் பாகம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சிவா- சஹானா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உண்டு. சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹிமா அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களையும், போட்டோஷூட் புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கோலி- ஸ்ருதிஹாசன் வரை கறுப்புத் தண்ணீரை விரும்பி குடிக்கும் பிரபலங்கள்… என்ன ஸ்பெஷல்?

சமீபகாலமாக சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் தாங்கள் அன்றாடம் குடிக்கும் தண்ணீருக்கு பதிலாக Black Water

புதிய விதிகள், திருநங்கைகள்: களைகட்டப்போகும் பிக்பாஸ் சீசன் 5!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்து விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் செட் போடும் பணி

ஹாலிவுட் ஆக்ஷன் நடிகர் டாம் க்ரூஸின் கார் திருட்டு… படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!

“மிஷன்:இம்பாசிபிள்“ வரிசை படங்களில் நடித்து உலகப்புகழ் பெற்றவர் நடிகர் டாம் க்ரூஸ்

ஒருபால் திருமணத்தில் பாரம்பரியமும் வேணும்… புரட்சியில் மலர்ந்த கதை!

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்வதைத்தான் இந்த உலகம் இன்றைக்கும் விரும்பி வருகிறது.

பாரா ஒலிம்பிக் போட்டி: பதக்கத்தை உறுதி செய்த இந்திய வீராங்கனை!

சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதில் ஒரு தங்கம் உள்பட 7 பதக்கங்களை இந்தியா வென்றது என்பது தெரிந்ததே.