டிவி நிகழ்ச்சியில் பிரபலமான ராக்ஸ்டார் ரமணியம்மாள் காலமானார்: ரசிகர்கள் இரங்கல்..!

  • IndiaGlitz, [Tuesday,April 04 2023]

சின்னத்திரை இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது அபார திறமை மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்ட ராக் ஸ்டார் ரமணியம்மாள் காலமானார். அவருக்கு வயது 69

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ’சரிகமபா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ராக் ஸ்டார் ரமணி அம்மாள். இவர் நடுவர்கள், ரசிகர்கள் முன்னிலையில் தனது அபார இசைத்திறமையை வெளிப்படுத்தினார் என்பதும் அதனை அடுத்து அவர் ராக்ஸ்டார் என்ற அடைமொழியால் ரசிகர்களால் புகழப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

எம்ஜிஆர் பாடல்களுக்கு மிகப்பெரிய ரசிகையான இவர் ஒரு சில திரைப்படங்களிலும் பாடியுள்ளார் என்பதும் குறிப்பாக விஜய் சேதுபதி நடித்த ’ஜுங்கா’ விஷால் நடித்த ’சண்டைக்கோழி 2’ சூர்யா நடித்த ’காப்பான்’ படங்களிலும் பாடியுள்ளார். மேலும் யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ’பொம்மை நாயகி’ படத்தில் இவர் பாடிய ஒரு பாடலையும் இவர் பாடியுள்ளார்

இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராக் ஸ்டார் ரமணியம்மாள் திடீரென வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவருடைய மறைவு ரசிகர்களை வெறும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

More News

நட்சத்திர ஜோடியின் சூப்பர்ஹிட் படத்தின் அடுத்த இரண்டு பாகங்கள்: ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

பாலிவுட் திரை உலகின் நட்சத்திர ஜோடி ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட் நடித்த 'பிரம்மாஸ்திரம்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே.

கஜோல் மகளா இவர்? அம்மாவை விட இரு மடங்கு கிளாமரில் கலக்கும் மகள்.. வைரல் புகைப்படங்கள்..!

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அம்மாவை விட இரு மடங்கு கிளாமரில் மகள் இருப்பதாக கமெண்ட்

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய 'எல். ஜி. எம்' படக் குழு

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான தோனியின் புத்திசாலித்தனமான அதிரடி ஆட்டத்தை நேரில் கண்டு, 'எல். ஜி. எம்' பட குழுவினர் வியந்து பாராட்டிக் கொண்டாடினர்.

அக்கா - தங்கை போல் இருக்கும் அனுபமா பரமேஸ்வரனும் அவர் அம்மாவும்.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் மலையாள திரை உலகின் நடிகைகளில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள நிலையில் அம்மா - மகள் போல்

இதை செய்யவில்லை என்றால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவேன்: 2வது வார்னிங் கொடுத்த தோனி..

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இதை மட்டும் செய்யவில்லை என்றால் அவர்கள் வேறு கேப்டனின் கீழ்தான் விளையாட வேண்டிய நிலை வரும் என்று தல தோனி போட்டி முடிந்ததும் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது