close
Choose your channels

யோகி பாபு ஜோடியான பிரபல சீரியல் நடிகை!

Saturday, October 31, 2020 • தமிழ் Comments

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தற்போது ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யோகி பாபு நடிக்கும் படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவர் நடித்து வருகிறார்.

யோகி பாபு நடித்து வரும் படங்களில் ஒன்று ’மண்டேலா’. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அவர் நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் என்பவர் நடித்துள்ளார். ‘அழகிய தமிழ் மகள்’ என்ற சீரியலில் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், ஏற்கனவே ’டூலெட்’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் பஹத்பாசில் படம் உள்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் ஷீலா, தற்போது யோகிபாபுவின் ’மண்டேலா’ உள்பட 6 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காமெடி கதாநாயகனாக யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்தாலும் தன்னுடைய கதாபாத்திரம் இந்த படத்தில் மக்கள் மனதில் பதியும் வகையில் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தனக்கு கமர்சியல் படங்களில் நடிக்க ஆசை என்றும் நெகட்டிவ் கேரக்டர் கிடைத்தால் நடிக்க தயார் என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz