படப்பிடிப்பில் திடீரென படமெடுத்த நல்ல பாம்பு.. நடிகை பதிவு செய்த அதிர்ச்சி வீடியோ.!

  • IndiaGlitz, [Friday,February 23 2024]

தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் நடிகை படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த போது திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு நல்ல பாம்பு நுழைந்து படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோவை சீரியல் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ராஜா ராணி’ உட்பட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை ஆலியா மானசா. இவர் ’ராஜா ராணி’ தொடரில் நடித்த சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நடிகை ஆலியா மானசா திருமணத்திற்கு பின்னரும் பிஸியாக சின்னத்திரையில் நடித்து கொண்டிருக்கிறார் என்பதும் தற்போது அவர் ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் படப்பிடிப்பின் போது திடீரென ஒரு நல்ல பாம்பு படப்பிடிப்பு நடந்த வீட்டுக்குள் வந்ததாகவும் அதை கண்டு அதிர்ச்சி அடைந்து பட குழுவினர் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

’எங்கள் படப்பிடிப்பு தளத்தில் திடீரென புதிய விருந்தினர் வந்திருக்கிறார்’என்ற கேப்ஷனுடன் ஆலியா மானசா வெளியிட்டுள்ள பாம்பு படம் எடுத்து ஆடும் வீடியோவை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து படப்பிடிப்பின் போது கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்று அவருக்கு பலர் அறிவுரை கூறியுள்ளனர்.

More News

கவுதம் மேனனின் அடுத்த 2 படங்கள் யுனிவர்ஸ் படங்கள் தான்: அவரே அளித்த தகவல்..!

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான 'ஜோஷ்வா இமை போல் காக்க' என்ற திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படமும் இந்த படத்தை அடுத்து வெளியாக

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு.. விஜயகாந்த், கமல் பாணியில் விஜய்?

தளபதி விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவ்வப்போது இந்த கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது

துணையை கண்டுபிடித்த விவாகரத்தான நடிகைக்கு திருமணம்.. க்யூட் புகைப்படங்கள்..!

விவாகரத்தான  மூன்று ஆண்டுகள் கழித்து துணையை கண்டுபிடித்ததாக சமீபத்தில் அறிவித்த நடிகை தற்போது திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசனின் அடுத்த படம் 9 பாகங்களாக தயாராகிறதா? ஆச்சரிய தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் 9 பாகங்களாக திரையிடப்பட திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'லால் சலாம்' சக்சஸ் மீட்.. முக்கியமான ரெண்டு பேரை காணவில்லையே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் தற்போது நடந்துள்ளது. ஆனால் இந்த படத்தில் நடித்த இரண்டு முக்கிய பிரபலங்கள் இந்த சக்சஸ்