close
Choose your channels

தமிழக முதல்வரை பாராட்டிய அண்ணன் - தம்பி நடிகர்கள்: வைரல் புகைப்படம்

Wednesday, September 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை அண்ணன், தம்பி நடிகர்கள் அடுத்தடுத்து பாராட்டு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்று சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு அறிவிப்பும் மக்கள் நலனுக்கான அறிவிப்பாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் நேற்று பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆட்சியை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதினர் என்பதும், அந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் பவன் கல்யாணின் சகோதரரும் தெலுங்கு நடிகருமான சிரஞ்சீவி, முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து உள்ளார். இந்த சந்திப்பின்போது நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வரை அண்ணன், தம்பி நடிகர்கள் அடுத்தடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.