மாஸ் நடிகருக்கு கொரோனா பாதிப்பு: குடும்பத்துடன் தனிமைப்படுத்தி கொண்டதால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Monday,May 10 2021]

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தினந்தோறும் இந்தியாவில் 4 லட்சம் பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். குறிப்பாக திரையுலகினர் கொரோனாவால் பாதிக்கப்படுவதும் அவர்களில் ஒரு சிலர் கொரோனாவுக்கு பலியாகி வருவதுமான சம்பவங்கள் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது

ஏற்கனவே பல திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா பாதித்த நிலையில் தற்போது மாஸ் நடிகர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. ஆம் தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகரான ஜூனியர் என்டிஆர் அவர்களுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது குடும்பத்துடன் தனிமைப்படுத்தி கொண்டதாக டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்

ஆனால் அதே நேரத்தில் யாரும் பயப்படவேண்டாம் என்றும் தான் நலமாக இருப்பதாகவும் தானும் தன்னுடைய குடும்பத்தினரும் கொரனோ வைரஸ் விதிமுறைகளை பின்பற்றி வருவதாகவும் தங்களை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் நலமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

More News

கொரோனா சிகிச்சை மையத்திற்கு ரூ.2 கோடி நன்கொடை வழங்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

பாலிவுட் சினிமாவில் Big B எனச் செல்லமாக அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் தற்போது

காற்றில் 6 அடி வரை பரவும் கொரோனா....! மக்களே உஷார்...!

கொரோனா வைரஸ் காற்றிலும் பரவி விட்டதால், மக்களுக்கு எளிதில் தொற்று  ஏற்படும் அபாயம் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு!

தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி

அம்மா, மாமியாருடன் நதியா: அன்னையர் தின ஸ்பெஷல் புகைப்படம்

நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அனைத்து திரையுலக பிரபலங்களும் தங்கள் அன்னையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்

கொரோனாவுக்கு பலியான மேலும் ஒரு பிரபல நடிகர்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என்பதும் தினமும் இந்தியாவில் சுமார் 4 லட்சம் பேர்களும் தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் பேர்களும்