close
Choose your channels

ஜனவரி 13ல் ரிலீசாகும் பிரபல நடிகரின் படம்: 'வாரிசு', 'துணிவு'க்கு பாதிப்பா?

Wednesday, December 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் ஜனவரி 13-ஆம் தேதி பிரபல நடிகரின் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவி நடித்த ’வால்டர் வீரய்யா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் சங்கராந்தி தினத்தில் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரஞ்சீவி, ஸ்ருதிஹாசன், ரவிதேஜா, கேத்ரின் தெரசா உள்பட பலர் நடித்த இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பெரும்பாலான தியேட்டர்கள் புக் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் போதுமான தியேட்டர் கிடைக்குமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் ’வாரிசு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் என்பதால் இந்த படத்திற்கு போதுமான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.