ஜனவரி 13ல் ரிலீசாகும் பிரபல நடிகரின் படம்: 'வாரிசு', 'துணிவு'க்கு பாதிப்பா?

விஜய் நடித்த ’வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் ஜனவரி 13-ஆம் தேதி பிரபல நடிகரின் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவி நடித்த ’வால்டர் வீரய்யா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் சங்கராந்தி தினத்தில் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரஞ்சீவி, ஸ்ருதிஹாசன், ரவிதேஜா, கேத்ரின் தெரசா உள்பட பலர் நடித்த இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பெரும்பாலான தியேட்டர்கள் புக் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் போதுமான தியேட்டர் கிடைக்குமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் ’வாரிசு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் என்பதால் இந்த படத்திற்கு போதுமான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாகும் அஜித்தின் ரீல் மகள்!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் அடுத்த படத்தில் அஜீத் படத்தில் அவருக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ப்ரியா அட்லியின் பிறந்த நாளில் இருக்கும் ஸ்பெஷல்: என்ன தெரியுமா?

பிரபல இயக்குனர் அட்லீயின் மனைவி ப்ரியா அட்லி நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டிலும் அவருடைய பிறந்த நாளில் ஒரு ஸ்பெஷல் இருப்பதாக அவர் தெரிவித்துள்லார்.

ஸ்கூட்டருக்கு டிரைவர் வைத்து கொண்ட மாளவிகா மோகனன்.. வைரல் வீடியோ

 நடிகை மாளவிகா மோகனன் ஸ்கூட்டருக்கு டிரைவர் வைத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .

'தளபதி 67' குறித்து 'துணிவு' இயக்குனர் என்ன சொன்னார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தளபதி 67'  திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று

பிக்பாஸ் சீசன் 6: வைல்ட்கார்ட் போட்டியாளரை உறுதி செய்த ஹாட்ஸ்டார்!

 பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும் ஒருசில போட்டியாளர்கள் சரியாக விளையாடவில்லை என்ற அதிருப்தி பார்வையாளர்கள் மத்தியில் உள்ளது .