close
Choose your channels

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா: டுவிட்டரில் தகவல்

Thursday, January 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பரவி வருகிறது என்பதும், கடந்த சில நாட்களாக திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ்பாபு தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்வதாகவும், மேலும் அனைவரும் உடனடியாக தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ளுங்கள் என்றும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் அனைத்து கொரோனா நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மகேஷ்பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.