சாலை விபத்து: ஒரே காரில் பயணித்த 2 நடிகைகள் சம்பவ இடத்திலேயே மரணம்

  • IndiaGlitz, [Thursday,April 18 2019]

ஐதராபாத் அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்து ஒன்று இரண்டு தொலைக்காட்சி நடிகைகள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள் அனுஷா ரெட்டி மற்றும் பார்கவி ஆகியோர் தங்களது படப்பிடிப்பு முடித்துவிட்டு, ஒரே காரில் வீட்டிற்கு செல்வதற்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற கார் விகாராபாத்தில் இருந்து ஐதராபாத்துக்கு சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக ஒரு லாரி வந்தது. அந்த லாரியின் மீது மோதாமல் இருக்க கார் டிரைவர் காரை திருப்பியபோது, கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் நடிகைகள் அனுஷா ரெட்டி மற்றும் பார்கவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். அவருடன் காரில் பயணித்த டிரைவர் சாக்ரிவீர் மற்றும் வினய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News

வாக்குப்பதிவு தொடங்கியது: ரஜினி, அஜித் ஓட்டு போட்டனர்

தமிழகத்தில் இன்று  38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்

சென்னை அருகே 1381 கிலோ தங்கம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி

தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் இன்றிரவு விடிய விடிய அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயற்சிப்பார்கள்

முடிவுக்கு வந்தது விஷ்ணுவின் மற்றொரு ஸ்போர்ட்ஸ் திரைப்படம்

நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் நடிகர் விக்ராந்த் இணைந்து நடித்து வந்த ஸ்போர்ட்ஸ் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

நாளை தமிழகத்தில் தேர்தல் நடக்குமா? பரபரப்பு தகவல்

தமிழகத்தில் நாளை 39 மக்களவை தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

அஜித் திரைப்படத்தை விளம்பரத்திற்கு பயன்படுத்திய தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை அடுத்து அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்